
மட்டக்களப்பு – வந்தாறுமூலை அகதி கள் முகாம் படுகொலையின் 27 ஆவ து ஆண்டு நினைவுதினம் வந்தாறு மூலை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிலையில், தமிழின இன ப்படுகொலையை நினைவுகூர்ந்து கிழக்கு பல்கலைக்கழக வாளாகத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வு தொட ர்பாக தகவல் சேகரிப்பதற்கு பல்கலை கழக நிர்வாகத்தினரால் ஊடகவிய லாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் என்பது 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்ச மடைந்திருந்த தமிழ் அகதிகள் 158 பேர் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வாகும்.

அதே மாதம் 23 ஆம் திகதி மேலும் 16 பேரை கைது செய்த ஸ்ரீலங்கா இராணு வம் அவர்களை அழைத்துச் சென்று படுகொலை செய்ததாக நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவித்திருந்தன.
கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசாரபீட மாணவர் ஒன்றியம் மற்றும் உலக தமிழ் மாணவர் ஒன்றியம் ஆகியன இணைந்து இப் படுகொலை நினைவு தினத்தை நேற்றைய தினம் ஒழுங்கமைத்திருந்தன.
இந்நிலையில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை தொட ர்பில் அஞ்சலி நிகழ்வில் கலந்த மாணவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.