மாகாண, உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் - பொய்யான வாக்குறுதி வழங்கி அரசு மக்களை ஏமாற்றியுள்ளது : கீர்த்தி தென்னகோன் குற்றச்சாட்டு


மாகாண சபை, உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் எதனையும் அரசு கொடுத்த வாக்குறுதிக்கு அமைவாக நடத்தவில்லை. 

இது தொடர்பில் அரசு மக்களுக்கு பொய்யான வாக்குறுதியை வழங்கி ஏமாற்றியுள்ளது என கபே அமைப்பின் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் குற்றம் சாட்டியுள்ளார்.

மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா கூறிய எதனையும் நடைமுறைப்படுத்தவில்லையெனவும் இந்த தேர்தல் குறித்த வாக்குறுதியையா வது அமைச்சர் நிறைவேற்றி தனது கௌர வத்தைப் பாதுகாத்துக் கொள்ளட்டும் என கபே அமைப்பின் பணிப்பாளர் கீர்த்தி தென்ன கோன் தெரிவித்தார்.

உள்@ராட்சி சபைத் தேர்தலை வைத்து முடியுமான அனைத்து பொய்களையும் சம்ப ந்தப்பட்ட அமைச்சு அவிழ்த்து விட்டது. அதற்கான தேர்தல் இதுவரையில் நடைபெற வில்லையெனவும் கீர்த்தி தென்னகோன் சுட்டிக்காட்டினார்.

மேலும் உள்@ராட்சி மன்றங்களுக் கான தேர்தல்கள் யாவும் எதிர்வரும் ஜனவரி மாதமும் பதவிக்காலம் நிறைவடையும் மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதமும் நடைபெறும் என்று உள்@ராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். 

மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம், மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் புதன் கிழமை இரவு நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டமூலம் தொடர்பில், ஊடகவியலாளர்க ளுக்குத் தெளிவுப்படுத்தும் ஊடகச் சந்திப்பு, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில், நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,  

மாகாண சபைகள் திருத்தச் சட்டமூல த்தை, மூன்றிலிரண்டு பெரும்பான்மையு டன் நாடாளுமன்றத்தில் நிறைவேறியமை யானது, இந்த நாட்டில் ஸ்திரமான அரசாங் கம் அமையப்பெற்றுள்ளதை எடுத்துக்காட் டுகிறது.  

இந்தத் திருத்தச் சட்டத்தின் ஊடாக, பல் வேறு அனுகூலங்கள் மக்களுக்குக் கிடைக்கப் பெறவுள்ளன. 

இந்த முறையின் ஊடாக 25 சதவீதமான பெண்கள் உள்வாங்கப்படு வார்கள். நாட்டில் 52 சதவீதமாக உள்ள பெண்களுக்கு, அரசியலில் முறையான வகி பாகத்தை அளிக்க வேண்டியது எமது கட மையாகும்.  

அத்துடன், நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம், 90 உறு ப்பினர்கள், அரசியல் பின்னணியின் ஊடாகவே பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். 

புதிய தேர்தல் முறையினூடாக, மக்கள் சேவையாற்ற ஆவல்கொண்டுள்ள புதியவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.  

நாம் இந்தத் திருத்தச்சட்டமூலத்தை சமர் ப்பிக்கும்போது, சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் குறித்து நான் கவலையடைகிறேன். 

மக்களின்குறித்த திருத்தச் சட்டத்தில் அரசியல் கட்சி கள், மக்கள் ஏதாவது திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என எண்ணினால், அது குறி த்து கலந்துரையாடவும் நாம் தயாராக இரு க்கிறோம். அதற்கான உறுதிமொழியை பிர தமர் ரணில் விக்கிரமசிங்கவும் வழங்கியுள்ளார். 

20ஆவது திருத்தச்சட்ட மூலம் தொடர் பில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை எம க்கு பெறக்கூடியதாக இருக்கின்ற போதிலும், சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்வதற்கு அர சாங்கம் தீர்மானிக்கவில்லை.  
அதனால், மாகாண சபைத் திருத்தச்சட்ட மூலத்தைக் கொண்டு வந்தோம். 

எதிர்கால த்தில் அனைத்து வகையான தேர்தல்களும், புதிய தேர்தல் முறையிலேயே நடத்தப்படும் என்பதை நான் திட்டவட்டமாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.  
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila