தமிழ்ப் பழமொழிகள் கூறுகின்ற அர்த்தங் கள் மிகவும் அற்புதமானவை.
முன்னைய காலத்தில் நம்மவர்கள் தமிழ்ப் பழமொழிகளையே எடுத்துக்காட்டாக உதாரணங்களாக முன்வைத்தனர். இப்போது பழமொழிகள் பழையனவாகிவிட்டன.
இதனால் உண்மைத் தத்துவங்களும் நியா யங்களும் விளங்கப்பட முடியாதவைகளாகியுள்ளன.
எனினும் தமிழ்ப் பழமொழிகள் கூறுகின்ற தத்துவங்களே யதார்த்தத்தில் நடந்து கொண்டிருப்பதை நாம் அவதானிக்க முடியும்.
இந்த வகையில் அறுபது நாளுக்கு எழுவது கந்தை என்றொரு பழமொழி நம் கிராமங்களில் பேசப்படுவதுண்டு.
அறுகின்ற நாளைக்கு எழுவது அகந்தை என்ற பழமொழியே அறுபது நாளுக்கு எழு வது கந்தை என்பதாகக் கூறப்பட்டது.
இதன்பொருள் யாருக்கெல்லாம் அகந்தை எழுகின்றதோ அவர்கள் அழிவுக்குத் தங்க ளைத் தயார்படுத்துகின்றனர் என்பதுதான்.
இந்தப் பழமொழிக்கு இப்போது இலங்கை யில் பெளத்தபீடங்கள் உதாரணப்படுத்தக் கூடிய னவாக உள்ளன.
இலங்கை பெளத்த சிங்கள நாடு என்று தமிழ் முஸ்லிம் மக்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே தீர்வு பற்றி - அரசியலமைப்புச் சீர் திருத்தம் பற்றி கவனிக்க முடியும் என்பதாக பெளத்த பீடங்களின் போக்கு உள்ளது.
அதிலும் அஸ்கிரிய பீடத்தினர் இது விடயத் தில் மிகவும் உறுதியாக இருப்பதையும் காண முடிகின்றது.
இதுதவிர வடக்கு மாகாணத்தில் பெளத்த விகாரைகளையும் சிங்களப் பாடசாலைகளை யும் அமைப்பது தொடர்பிலும் அஸ்கிரிய பீடம் அதீத கவனம் செலுத்தி வருவதாக உள்ளகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிகப்பெரும் வன்னி யுத்தம் நடந்து அதில் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டு ஒரு பகுதி யினர் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில்; தமிழ்ப் பெற்றோர் கண்ணீரும் கம்பலையுமாக வாழு கின்ற இந்த நேரத்தில்,
தமிழ் மக்களே உங்களின் துன்பத்தில், துயரத்தில் நாங்களும் பங்கெடுக்கின்றோம். உங்களின் உரிமைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.
இதற்காக பெளத்த பீடம் பாடுபடும் என்று தமிழ் மக்களை ஆற்றுப்படுத்த வேண்டிய பெளத்த பீடங்கள் - பெளத்த துறவிகள் இவை யயல்லாவற்றையும் மறந்து தமிழ் மக்கள் ஆற் றொணாத் துன்பத்தில் வீழ்ந்து கிடக்கையில் இலங்கை பெளத்த சிங்கள நாடு என்று உயில் எழுதி வைக்க ஓடித் திரிகின்றனர்.
கெளதம புத்தபிரானின் உயர்ந்த போதனை களைப் புதைத்து விட்டேனும் இங்ஙனம் நினைப் பது சாத்தியமானதல்ல.
அடிப்படை மனிதநேயம் இருந்தால் கூட இந்த நாட்டில் நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம் என்றுரைப்பதுதான் மனித தர்மம். ஆனால் தர்மத்தைப் போதிக்க வேண்டிய பெளத்த துறவிகள் அதனை மறந்துள்ளனர்.
ஆட்சி அதிகாரங்களும் தங்கள் கையில் என்ற ஒரே கர்வத்துடன் பேரழிவைச் சந்தித்த வடக்கு மாகாணத்தில் பெளத்த விகாரைகளை கட்டுவதற்கு இடம்தேடுகின்றனர்.
ஓ! தர்மம் உரைக்க வேண்டியவர்களே அகந் தைப்பட்டீராயின் தர்மத்தின் தீயில் அகப்பட்டு அழிவீர். இதுவே நிஜம்.
இதையே எங்கள் தமிழ்ப் பழமொழி அறு பது நாளுக்கு எழுவது கந்தை என்றுரைக்கிறது அறிமின்.