மக்கள் சார்ந்த அரசியல் பயணங்களின் போது வித்தியாசமான கருத்துக்கள் ஏற்பட்டு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தாலும் பரஸ்பரம், நம்பிக்கை, ஒற்றுமை என்பன எமக்குள்ளே வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என வட க்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அஸ்கிரியபீட மாநாயக்கர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரகாகொட ஞானரத்தன தேரர் உள்ளிட்ட பௌத்த மதகுருமார்களை நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கண்டி அஸ்கிரிய மகா விஹாரையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இச் சந்திப்பில் வட மாகாண முதலமைச்சருடன் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் அனந்தி சசிதரனும் பங்கேற்றிருந்தார்.
மகாநாயக்கர்களுடனான சந்திப்பின் பின்னர் முதலமைச்சரை ஊடகவியலாளர்கள் சிலர் சந்தித்திருந்தனர்.
இதன்போது அவ ர்களது கேள்விகளுக்கு பதிலளித்த முதலமைச்சர்,
பௌத்த மதகுருமார்கள் தங்களுடைய காரிய சபை முழு அங்கத்தவர்களையும் கொண்டு வந்து இந்த கூட்டத்தை நடத்தினார்கள்.
இதனால் தனிப்பட்ட முறையிலே அவரு டன் அஸ்கிரிய பீட மகாநாயக்கர் கதைக்க முடியாது போயுள்ளது.
என்றாலும் அவர்களுடைய எண்ணங்கள் என்ன என்ன சிந்தனைகள் என்ன வென்று எல்லாம் அறியக்கூடியதாக இருந்தது.
சந்திப்பும் நன்மை தருவதாகதான் இருந்தது. ஆனால் அதே நேரத்தில் அவர்களிடம் நான் கூறியிருந்தேன் நீங்கள் கூறுவது அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்ள முடி யாது என்றாலும் பல விடயங்கள் பேசும் போது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது.
எங்களுடைய பரஸ்பரம், நம்பிக்கையும் ஒற்று மையும் வரும் காலத்தில் மேம்பட்டு இருக்க வேண்டும்.
அதை தான் நாங்களும் வேண்டுகின்றோம். அதே நேரத்தில் அரசியல் யாப்பு சம்பந்தமாக எங்களுக்கிடையே வித்தியாச மான கருத்துக்கள் இருப்பதை நான் எடுத்து காட்டினேன்.
அவர்கள் அதை கேட்டுக்கொண்டார்கள். ஆகவே இதை ஒரு நல்ல பயண மாக நான் எதிர்பார்த்துக்கொள்கின்றேன்.
இதிலிருந்து வரும் காலத்தில் நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது என முதலமைச்சர் தனது கருத்தை தெரிவித்திருந்தார்.