தாக்கப்பட்ட ஊடகவியலாளரிடம் பகிரங்க மன்னிப்புக்கோர முன்னாள் எதிர்கட்சி தலைவர் அமிர்தலிங்கத்தின் மகன் பகீரதன் தூதனுப்பியுள்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்.பொதுநூலகத்தினில் வைத்து அமிர்தலிங்கம் பகீரதன் மற்றும் தமிழரசு குண்டர்படையினை சேர்ந்த கௌரிகாந்தன் ஆகியோர் இணைந்து மூத்த ஊடகவியலாளர் ந.பரமேஸ்வரன் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இந்நிலையினில் அவ்வாறு தாக்குதல் ஏதும் ஊடகவியலாளர் மீது நடந்திருக்கவில்லையென தமிழரசு எடுபிடிகள் வாதிட்டுவந்த போதும் தாக்குதல்மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அமிர்தலிங்கம் பகீரதன் மற்றும் கௌரிகாந்தன் ஆகிய இருவரும் தொடர்ந்தும் கள்ளமௌனம் காத்துவந்திருந்தனர்.
இந்நிலையினில் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட மனஅழுத்;தம் மற்றும் அதனால் ஏற்பட்ட இரத்த அழுத்தத்தினையடுத்து ந.பரமேஸ்வரன் இன்று செவ்வாய்கிழமை யாழ்.போதனாவைத்தியசாலையினில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.கௌரிகாந்தன் அவரது கழுத்தினை இலக்கு வைத்து தாக்கியதால் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சட்டவைத்திய அதிகாரி தரப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையினில் இன்று யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த தமிழரசு கட்சி பிரமுகர் குலநாயகம் மற்றும் முன்னாள் யாழ்.மாநகரசபை உறுப்பினர் தங்கமுகுந்தன் ஆகிய இருவரும் பகிரங்க மன்னிப்பு கோருவது பற்றி அறியத்தந்ததுடன் காவல்துறையினில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டினை விலக்கிக்கொள்ளவும் இணங்கிப்போவது தொடர்பான கோரிக்கையினையும் முன்வைத்துள்ளனர்.
இதனை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்த மூத்த ஊடகவியலாளர் ந.பரமேஸ்வரன் யாழ்.காவல்நிலைய பொறுப்பதிகாரி அல்லது யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையினில் மன்னிப்புகோரவேண்டுமென சுட்டிக்காட்டியதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே தாக்குதல் தொடர்பினில் கொழும்பு ஊடகங்களும் ஊடக அமைப்புக்களும் போர்க்கொடி தூக்கியிருந்த போதும் அரசியல் கட்சிகள் எவையும் இது பற்றி கருத்துவெளியிடாதிருந்துவருவது குறிப்பிடத்தக்கது.
Add Comments