அரசியலமைப்பினூடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரப் பகிர்வினால், பிரிவினைவாதம் உருவாக மாட்டாது எனவும், அவ்வாறு உருவாகும் பட்சத்தில் அந்த அதிகாரத்தை திருப்பி எடுத்துக் கொள்வதற்கு அரசியல் யாப்பில் சரத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அரசியலமைப்பு நிபுணரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.
அரசியல் அமைப்பில் அதி காரப் பகிர்வு தொடர்பில் குறிப்பிடும் போது “ஏகீய” என்ற சொல்லை ஆங்கிலப் பதிப்பிலும் பதிவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண் டுள்ளது.
இந்த அதிகாரப் பகிர்வு குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. தற்போதைய அரசியல் அமைப்பிலும் கூட இல்லாத ஒரு புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்கு கொடுத்துள்ள அதிகாரத்தை வைத்து மாகாணம் நாட்டின் தேசிய நலனுக்கு எதிராக செயற்படுவதாக கண்டால், அந்த அதிகாரங்களை மீளவும் பெற முடியும் அல்லது மாகாண சபையையே கலைத்து விட வும் முடியும் எனவும் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண விளக்கம் அளித்துள்ளார்.
வழங்கும் அதிகாரத்தை திரும்பப் பெற யாப்பில் இடமுண்டு! ஜயம்பதி
Posted by : srifm on Flash News On 06:33:00
Related Post:
Add Comments