மகிந்த அணி, பௌத்த மகாநாயக்க தேரர்கள், கடும் போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகள் இந்தச் சட்டவரைவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிவந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், தினேஸ் குணவர்த்தன தலைமையிலான மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது. சுமார் 2 மணிநேரத்துக்கு அதிகமாக நடைபெற்ற இந்தச் சந்திப்பையடுத்தே, சட்டவரைவு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாது என்ற உத்தரவாதத்தை ஜனாதிபதி வழங்கியுள்ளார் எனத் தெரியவருகின்றது. பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதலை குற்றமாக அறிவிக்கும் பன்னாட்டுச் சமவாயத்தில் இலங்கை 2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் கையெழுத்திட்டிருந்தது. இதற்கு அமைவாக சட்டவரைவு உருவாக்கப்பட்டு நாடாளுமன்றில் சமர்பிப்பதற்கு திட்டமிட்டிருந்தது. மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்த நிலையில், சட்டவரைவை நாடாளுமன்றில் விவாதத்துக்கு அரசு எடுத்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில் மீளவும் சட்டவரைவு எதிர்வரும் 21ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்தது. இதற்கு தற்போதும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டன. எதிர்ப்பு வெளியிட்ட மகிந்த அணியின் முக்கிய உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பையடுத்தே, எதிர்வரும் 21ஆம் திகதி விவாத்துக்கு மேற்படி சட்டவரைவு எடுத்துக் கொள்ளப்படாது என்று தெரியவருகின்றது. |
காணாமல் ஆக்கப்படுதலைக் குற்றமாக அறிவிக்கும் சட்ட வரைவை, ஒத்திவைக்க அரசு முடிவு!
Add Comments