தமிழ் அரசியல் கைதிகளுக்காக வடக்கில் இன்று மாபெரும் கவனயீர்ப்பு


அநுராதபுரம் சிறைச்சாலையில் இன்று 15 ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து வரும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு ஆதரவாகவும் அவர் களின் கோரிக்கையை நிறைவேற்ற கோரியும் இன்று வடக்கில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அதேவேளை அவர்களுக்கு ஆதரவாக கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில், யாழ்ப் பாணத்தை சேர்ந்த இராசதுரை திருவருள் (வயது 40) கரணவாயை சேர்ந்த மதியரசன் சுலக்ஸன் (வயது 30) நாவலப்பிட்டியை சேர் ந்த கணேசன் தர்சன் (வயது 26) ஆகியோர் கடந்த 25ஆம் திகதியில் இருந்து இன்று வரை 15ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

மேற்குறித்த அரசியல் கைதிகள் மூவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2009 ஆண்டு கைது செய்யப்பட்டு கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து இவர்களுடைய வழ க்கு வவுனியா நீதிமன்றில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை சட்டமா அதிபர் திணைக் களத்தினர் தற்போது அனுராதபுரம் நீதிமன் றுக்கு மாற்றியுள்ளனர்.
 
அங்கு மொழிப்பிர ச்சினை உள்ள காரணத்தினால் பாரிய சிக் கலை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவித்து தமது வழக்கு வவுனியா அல்லது யாழ்ப்பாண நீதிமன்றங்களில் நடைபெற வேண்டும் என கோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடர்கின்றனர்.

இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் இவர்களுடைய கோரிக்கை களை நிறைவேற்ற தமிழ் அரசியல் தலை வர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண் டும் என கோரி யாழ்.பல்கலை சமூகம் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். 

அதனை தொடர்ந்து வடக்கு மாகாண சபையில் குறித்த விடயம் தொடர்பாக விசேட பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்ததுடன் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் கைதிகளை நேரில் சென்று பார்வையிட்டு போரா ட்டத்தை கைவிடுமாறும் கேட்டிருந்தனர்.

இந்த விடயத்தில் தமிழ் அரசியல் தலை வர்கள் உரிய முடிவை பெற்றுத்தரும்வரை தாம் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என கைதிகள் தெரிவித்ததுடன் தமது போராட்டத்தை தொடர்கின்றனர்.

இந்த நிலையில் வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் ஒன்று கூடி இன்று போராட்டம் ஒன்றை முன்னெடு க்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். 

குறித்த போராட்டம் வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெறவுள்ளது.

இதே வேளை கொழும்பு மகசின் சிறைச் சாலையில் உள்ள 70 தமிழ் அரசியல் கைதிகளும் இன்று ஒரு நாள் அடையாள உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறி வித்துள்ளனர்.       
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila