ஜனாதிபதியின் திருப்பதி வழிபாடு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்துமா?


திருப்பதி வெங்கடேஸ்வரப் பெருமானின் சிறப்பறியாதவர்கள் யாரும் இருக்க முடியாதெனலாம்.
அந்தளவுக்கு திருப்பதி ஏழுமலையானின் திருவருட் சக்தி உலகமெங்கும் வியாபித்துள்ளது.

கோவிந்தா, கோபாலா, வெங்கடேசா, ஏழு மலையானே! என்ற கோசத்துடன் ஏழுமலை ஏறி திருப்பதி வெங்கடாசலபதியை வணங்கு கின்ற அடியார் எண்ணிக்கையைப் பார்க்கும் போதெல்லாம் உள்ளம் பரவசப்படும். அந்தளவுக்கு திருப்பதியானின் அருளாட்சி பலரையும் ஈர்த்திருக்கிறது.

பொதுவில் இலங்கை ஆட்சித் தலைவர்கள் தாம் பதவியேற்ற கையோடு திருப்பதிக்குச் சென்று வழிபாடாற்றுவது வழக்கம்.

இதில் இலங்கையில் ஜனாதிபதி, பிரதமர் என்ற பதவிகளில் இருந்த எவரும் விதிவிலக் கல்ல.

இலங்கை பெளத்த நாடு என்று கூறிக்   கொண்டாலும் இந்து மதக் கடவுள் மீதுதான் இலங்கை பெளத்த ஆட்சியாளர்களுக்கு நிறைந்த நம்பிக்கை. அதனால்தான் அவர்கள் திருப்பதிக்குச் சென்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

திருப்பதியில் வீற்றிருக்கும் வெங்கடேஸ்வரப் பெருமானைத் தரிசிப்பதற்காக அண்மையில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றிருந்தார்.

அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்று ஏலவே இரண்டு தடவைகள் திருப்பதிக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.

இப்போது மூன்றாவது தடவையாக அவர் அங்கு சென்றுள்ளார். திருப்பதிக்குச் சென்று வழிபட்டால் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும் என்ற ஐதீகம் நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது.

அந்தவகையில் ஜனாதிபதி மைத்திரிபால மூன்றாவது தடவையாக கடந்த  7ஆம் திகதி திருப்பதிக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால அதிரடியாக திருப் பதிக்குச் சென்று தரிசனம் செய்ததற்குள் அவரிடம் ஏதோ மனக் குழப்பம் உள்ளது என்ற முடிவுக்கு நாம் வரமுடியும்.

அதிலும் குறிப்பாக இடைக்கால வரைபு வெளிவந்திருக்கும் நேரத்தில் அவர் திருப்பதிக் குச் சென்று வழிபாடு செய்துள்ளார்.

இதுதவிர, தேசிய அரசு ஆட்டம் காண்கி றது; ஆட்சியைக் கலைக்க கோரி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ தரப்பினர் ஆர்ப் பாட்டங்கள், பேரணிகள் நடத்தத் தயாராகியுள்ளனர்.

இவற்றுக்கு மேலாக அஸ்கிரிய பீடம் அரசியலமைப்புச் சீர்திருத்தம் வேண்டாம் என்று கண்டிப்புடன் கூறியுள்ளது.

நிலைமை இதுவாக இருக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் சார்ந்துள்ளது.

இத்தகையதோர் இக்கட்டான சூழ்நிலை யில்தான் ஜனாதிபதி மைத்திரி திருப்பதியானி டம் சென்றுள்ளார்.

தனக்கு மனக் குழப்பம் ஏற்படுகின்ற போதெல்லாம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ஷ திருப்பதிக்குச் செல்வது வழக்கம். வன்னிப் போர் முடிந்த பின்பும் அவர் திருப்பதிக்குச் சென்று திரும்பி வந்தார்.

எனினும் அவரின் ஆட்சி முடிவுக்கு வந்தது. திருப்பதியானிடம் தர்மமே வெல்லும் என்பதால் அப்படியயாரு திருப்பம் மகிந்தவுக்கு ஏற்பட்டது.

ஆக, ஜனாதிபதி மைத்திரி திருப்பதிக்கு இப் போது சென்று திரும்பியுள்ளதால் அவர் முக்கி யமான சில முடிவுகளை எடுக்கலாம் என்றும் அது முக்கிய திருப்பமாக அமையலாம் என்றும் கூறுவதில் தவறில்லை.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila