தமிழனுக்கும் படைத் தளபதி பதவி கொடுத்தோமல்லோ!


கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட ட்ராவிஸ் சின்னையாவின் பதவிக் காலம் முடிந்து விட்டது.

மொத்தம் ஆறு மாதங்கள் மட்டுமே ட்ரா விஸ் சின்னையா கடற்படைத் தளபதியாக இருந்தார். அவ்வளவுதான் இப்போது புதியவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் இனவாதம் இல்லை. தமிழர்கள் எச்சந்தர்ப்பத்திலும் புறக்கணிக்கப்பட வில்லை. அவர்களுக்கு உரிய இடங்கள் கொடுக் கப்படுகின்றன.
பிரதம நீதியரசராக, சட்டமா அதிபராக, கடற் படைத் தளபதியாக தமிழர்கள் இருந்துள்ள னர் என்றால் இலங்கையில் இனவாதம் இருக் கிறது என்று எப்படிக் கூறமுடியும்? என சர்வ தேச சமூகத்துக்குக் காட்டுவதற்கான ஏற்பாடு களை சிங்கள ஆட்சியாளர்கள் கச்சிதமாகச் செய்து முடிக்கின்றனர்.

அவர்கள் கூறுவதைக் கேட்கும் சர்வதேசப் பிரதிநிதிகள் நல்லம் நல்லம் என்று சொல்லி விட்டு போய்விடுவர்.

ஆனால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண் பதற்குத் காலம் தேவை. தமிழ் அரசியல்கைதி கள் தொடர்பில் உடனடியாக எதுவும் செய்ய முடியாது என்று கூறுவதைத் தாரக மந்திரமா கக் கொண்ட இலங்கை ஆட்சியாளர்களைப் பார்த்து,

ஐயா! உங்களுக்கெல்லாம் ஐந்து வருடங் கள் ஆட்சிப் பீடம் தந்தும் எதுவும் செய்வதாக இல்லை. கேட்டால் இன்னும் காலம் தேவை என்கிறீர்கள்.
அப்படியானால் வெறும் ஒரு மாதம்,  மூன்று மாதம், ஆறு மாதத்துக்கென உயர்பதவிகளில் தமிழர்களை நியமித்துவிட்டு தமிழர்களுக்கும் உயர்பதவி கொடுக்கிறோம் என்றால் அதன் அர்த்தம் என்ன?

கடற்படைத் தளபதியாக ட்ராவிஸ் சின்னை யாவை நியமித்த அரசாங்கம் ஆறு மாதத்து டன் அவரை அந்தப் பதவியில் இருந்து ஓய்வுக் குட்படுத்தியது.
கடற்படைத் தளபதியாக ஆறு மாதம் பதவி வகிக்கக்கூடிய ஒருவர் கடற்படைக் கட்டமைப் பில் எத்தகைய மாற்றங்களைச் செய்ய முடி யும். ஏதேனும் மாற்றம் செய்தால் அது நிலை த்து நிற்குமா? என்று கேட்பதற்கு ஆளில்லாக் குறைதான் நமக்கு இப்போது இருக்கும் பெரும் குறை.

ஆக, எந்த மாற்றத்தையும் செய்ய முடியாத மிகக் குறுகிய காலத்துக்கு பதவியைக் கொடுத்து விட்டு அதைக்காட்டி இனவாதம் இல்லை என்று நிரூபிப்பதற்கு முற்படும் பேரினவாத சிந் தனைக்கு சாட்டையடி கொடுக்க யார் வரு வாரோ தெரியாது.
அதேநேரம் உயர்பதவிகளில் தமிழர்களை நியமிப்பதற்கு முன்பாக, சம்பந்தப்பட்டவர் ஆட்சி யாளர்களுக்கு காட்டிய விசுவாசம் நீண்ட பட்டியலாகவும் இருக்க வேண்டும். இல்லை என்றால் அதுவும் கிடையாது என்பதே உண்மை.

எனினும் உண்மையைப் போட்டுடைத்து இது தான் நடக்கிறது என்று சொல்வதற்கு ஆன அரசியல் தலைமை எங்களிடம் இல்லை.
அதையும் மீறி உள்ளதை சொல்ல நினைப் பவர்களுக்கு தமிழ் அரசியல் தலைமை கொடு க்கும் பரிசு வேறாக உள்ளதெனும் போது,
தமிழ் மக்களின் நிலைமை போகப்போக மோசமாகிக் கொண்டு இருக்கிறது என்று சொல் வதைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila