
தமிழ் மக்களின் பண்பாட்டில் இறந்தவர்களுக்கான இறுதிக் கிரியைகள் தக னம் செய்யும் முறைகள் தனி சிறப்பானவை. மக்கள் கூடுமிடங்கள் ஆல யங்கள் போன்றவற்றில் தகனங்கள் இறுதிக் கிரியைகள் செய்வதில்லை.
நிலை இவ்வாறிருக்க யாழ்.முற்றவெளி மைதானத்தில் ஆரியகுளம் நாக விகாரையின் பீடாதிபதியின் உடலை தகனம் செய்ய இராணுவம் முயற்சிக்கி ன்றது. இது தமிழ் மக்களின் பண்பாட்டை மலினப்படுத்துவதாகவே அமையும். மேலும் இவ்வாறான நடவடிக்கைகளினால் இனங்களுக்கிடையில் நல்லிண க்கம் உருவாகாது.
மாறாக விரிசல் நிலையே அதிகரிக்கும். இராணுவம் பௌத்தமே மேலானது, வடமாகாணம் தங்களுடைய மண் என்னும் சிந்தனையில் செயற்படுகிறது. அதனை இலங்கை அரசாங்கமும் அங்கீகரித்து தேவையான ஒத்துழைப்புக்க ளையும் தொடர்ச்சியாக இராணுவத்துக்கு கொடுக்கிறது.
இந்த தகன கிரியை தொடர்பாக அவர்களிடம் கேட்டபோது தமக்கு ஒன்றும் தெரியாது என கூறுகிறார்கள். யாழ்.மாநகரசபையிடம் கேட்டால் அவர்களும் தெரியாது என்கிறார்கள்.
காணி தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமானது என்றாலும் வடக்கில் ஒரு அரசாங்கம் உள்ளது. எனவே இந்த தகன கிரியைகள் தொடர்பாக மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட மாகாண அரசாங்கத்துடன் பேசப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு ஒன்றும் பேசப்படாமல் இராணுவம் தான்தோன்றி தனமாக செயற்படுகின்றது. மக்கள் கூடும் யாழ்.நகரில் முனியப்பர் கோவிலுக்கு அரு கில் இந்த தகனம் நடக்கிறது. அதற்கு அதிகாரம் கொடுத்தது யார்?
இது மட்டுமல்ல தகன கிரியை நிறைவடைந்ததும் அங்கே விகாராதிபதிக்காக ஒரு விகாரையை அல்லது நினைவிடத்தையும் கூட இந்த இராணுவம் அமை க்கவே போகின்றது.
எனவே எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறு ப்பினர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்ப வேண்டும்." எனத் தெரிவித்து ள்ளார்.