மண் மீட்புக்காக முப்பது ஆண்டு காலப் போராட்டம். அதன் பின்பான தமிழ் அரசியல் தலைமையின் திருகுதாளங்கள் இவற்றையெயல்லாம் நினைக்கும்போது தமிழனாகப் பிறந்தது நாம் செய்த பாவமோ என்று எண் ணத் தோன்றும். அந்தளவுக்கு ஈழத்தமிழர் நாம் படும் துன்பம் துயரம் சொல்லுந்தரமன்று.
2009ஆம் ஆண்டில் முற்றுப்பெற்ற வன்னி யுத்தம், அதில் நடந்த போர்க்குற்றங்கள், இதற்கான சான்றாதாரங்கள் என்பன எங்கள் இனத்தின் மீது சர்வதேசத்தின் பார்வையைத்திசை திருப்பின.
எனினும் எங்களுக்குக் கிடைத்த அருமந்த சந்தர்ப்பத்தை நாங்களே காலால் எட்டி உதைத்து விட்டோம்.
வன்னிப் போரில் நடந்த தமிழின அழிப்புத் தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தமிழ் அரசியல் தலைமை விடாப்பிடியாக நின்றிருந்தால், இன்று நிலைமை வேறாக இருந்திருக்கும்.
என்ன செய்வது வாய்த்தது வாய்ப்பில்லை என்றால் கிடைத்த வாய்ப்புக்களை இழப்பது தலைவிதியாகிவிடும் என்பதே நம் நிலைமை யாக இருக்கையில், அதுபற்றிப் பேசுவதில் பலன் இல்லை.
ஆக, தொடர்ந்து நாம் செய்ய வேண்டியது என்ன? என்பது பற்றி ஆராய்ந்து தமிழினத்தின் இருப்பை இந்த மண்ணில் நிலைநிறுத்து வதற்கான முயற்சிகளை முன்னெடுப்பது கட்டாயமானதாகும். எனினும் அதுவும் நடப்பதாக இல்லை.
மாறாக எதுவும் தெரியாதவர்களாக நாம் எம்மைக் காட்டிக் கொள்வது மட்டுமே நடந் தேறுகிறது.
வடக்கு மாகாண சபையில் அமைச்சர் களாக இருந்த இருவர் தமது அமைச்சுப் பதவி தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர். அமைச்சர் பதவியை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கே உண்டென்பது அவர்கள் முன்வைத்த முக்கிய விடயம்.
அமைச்சர் பதவி உள்ளிட்ட பல விடயங்களில் மாகாண சபைக்கான உரிமை முதலமைச்சருக்கு வேண்டும் எனக் கேட்கும் தமிழர்கள் நாம், நீதிமன்றில் ஏறி அமைச்சர் பதவியை நீக்குகின்ற அதிகாரம் ஆளுநருக்கே உண்டு எனக் கூறியபோது அடிப்படையிலேயே அந்த வழக்கு ஏற்புடையதன்று என நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது.
என்ன செய்வது தங்களை ஆளுமைமிக்க சட்டவாதிகள் எனக் காட்டிக் கொள்வோரும் இந்த விடயத்தில் நீதிமன்றம் செல்லலாம், வெற்றி பெறலாம் என உடன்பட்டனர் என்றால் எங்களின் நிலைமை எப்படியாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு இந்த உதார ணத்தைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை எனலாம்.
ஆக, எங்களுக்கான உரிமை என்ன? எங்களுக்குத் தரப்பட்ட உரிமை என்ன? என்பதில் நாம் தெளிவில்லாதபோது எல்லாம் தோல்வியாகிப் போவது தவிர்க்க முடியாததாகிவிடும்.
மாகாண அமைச்சர்களை நீக்குகின்ற அதி காரம் ஆளுநருக்கே உண்டு எனக்கூறி நீதி மன்றம் ஏறுவோர் இடைக்கால வரைபில் தமிழர் களுக்கு சமஷ்டி உள்ளிட்ட எல்லா அதிகாரமும் இருப்பதாகக் கூறுகின்றனர் என்றால்,
சரியான விடையின் கீழ் கோடிடுவதில் படு பிழை நடக்கிறது என்பது மட்டும் தெட்டத் தெளிவாகத் தெரிகிறது.