யாழ் குடாநாட்டில் நேற்று இரவு வாள்வெட்டுக்குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான கொலைவெறித் தாக்குதலில் 9 பேர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாய மடைந்ததுடன் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட் களும் சேதமாக்கப்பட்டுள்ளது. மானிப்பாய்- சங்குவேலி, நல்லூர், யாழ் ப்பாணம், கோண்டாவில், ஆறுகால்மடம் ஆகிய பகுதிகளில் ஒரே இரவில் இந்த தாக் குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயம் அடைந்தவர் கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக தெரிய வருகையில், மானிப்பாய்- சங்குவேலி காளிகோவிலு க்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கொழும்பு செல்வதற்கு சிலர் ஆயத்தமாகியு ள்ளனர். அவர்களை ஏற்றிச்செல்வதற்காக முச்சக்கரவண்டியுடன் ஒரு இளைஞர் வந்து வீட்டின் முன் நின்றுள்ளார்.
அப்போது இரவு 7.30 மணியளவில் 5 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட குழுவினர், முச்சக்கரவண்டி ஓட்டு நரை வாளினால் வெட்டுவதற்கு வந்துள்ள னர். அப்போது அந்த இளைஞர் வீட்டினுள் சென்றுள்ளார். அவரை துரத்திச்சென்ற அந்த குழுவினர், வீட்டில் நின்றிருந்த ஆண்களை தாறுமாறாக வெட்டியதுடன் அந்த இளைஞ னையும் கொடூரமாக வெட்டியுள்ளனர். பின் னர் வீட்டில் இருந்த அனைத்து பொருட்க ளையும் மிச்சம் விடாது அடித்து நொருக்கி விட்டு சென்றுள்ளனர்.
போகும் வழியில் கடைக்கு முன் நின்றி ருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் கொத்தி தாக்கிவிட்டு வாளினால் இரத்தம் சொட்டச் சொட்ட வீதியால் சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் முச்சக்கரவண்டி ஓட்டு நர், வீட்டில் இருந்த தந்தை, பெரிய தந்தை மற்றும் மகன் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
இதில் மானிப்பாயைச் சேர்ந்தவர்களான முச்சக்கரவண்டி ஓட்டுநர் பத்மநாதன் ஜெனி (வயது30) மற்றும் சிவகுருநாதன் (வயது 54), ரவிசங்கர் (வயது44), பகீரதன் (வயது 17) என்பவர்களே வாள்வெட்டுக்கு இலக்கா கியுள்ளனர்.
இதேவேளை, யாழ் நல்லூர் பகுதியில் ஆங்காங்கே இரவு 8 மணியளவில் நடை பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் தலை, கால், கை போன்றவற்றில் படுகாயம் அடைந்த நிலையில் மூவர் வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனைக்கோட்டை ஆறுகால்மடம் பகுதி யிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல் ஒருவரை வெட்டியதுடன் அங்கிருந்த பொருள்களை உடைத்து நாசமாக்கியது.
4 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் தமது முகத்தை மூடிக்கட்டியிருந்ததுடன் கோட் அணிந்திருந்தனர் எனத் தெரிவிக்கப் பட்டது. கும்பலின் வாள்வெட்டுக்கு இலக்காகி ஆனைக்கோட்டை லோட்டஸ் வீதியைச் சேர்ந்த குலசிங்கம் குலபிரதீபன் ( வயது 35 ) என்பவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கோண்டாவில் டிப்போவுக்கு முன்பாக உள்ள உணவகத்துக்குள் நேற்றிரவு 8.10 மணியளவில் புகுந்த கும்பல் அங்கிருந்த தளபாடங்களை அடித்துச் சேதப்படுத்தியது டன், ஒருவரையும் வெட்டிக் காயப்படுத்தியது.
சம்பவத்தில் புத்தூர் கிழக்கைச் சேர்ந்த செல்வராசா மணிமாறன் ( வயது 27) என்ப வர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரத்தில் 20க்கும் அதிக மான வாள்வெட்டு சம்பவங்கள் இடம்பெற்று ள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர். இதுவரை எவரும் குறித்த சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்படவில்லை என் பது குறிப்பிடத்தக்கது.