முவின மக்களும் வாழும் இலங்கையில் சிங்கள மக்களை பெரும்பான்மையினராக பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேசிய கொடி அமைந்துள்ளமையினாளேயே இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் தேசிய கொடியை ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவிப்பதாக வடமாகாண கல்வி அமைச்சர் கே சர்வேஸ்வரன் தெரிவிக்கின்றார்.
தந்தை செல்வாவின் காலம் முதல் இலங்கையின் தேசிய கொடியை ஏற்றுவதற்கு நாங்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றோம்.
இதற்கு புதிய காரணங்கள் எதுவும் இல்லை, மூவின மக்களும் வாழ்கின்ற இலங்கையில் சிங்களவர்களையும் பௌத்த மதத்தினையும் பிரதிநிதித்துவ படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இதனாலேயே குறித்த கொடியினை ஏற்றுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
1950 ஆம் ஆண்டு முதல் குறித்த விடயம் தொடர்பில் நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சியின் போது =1ி`மைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டது.
அதன்போதும் நாங்கள் இந்த விடயத்தினை எடுத்துரைத்தோம். ஆனால் அனைத்து அதிகாரிகளும் பாராமுகமாகவே செயற்பட்டனர்.
புதிதாக மேற்கொள்ளப்படவுள்ள அரசியல் அமைப்பிலும் இந்த விடயம் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
ஆகையினால், தேசிய கொடியானது மூவின மக்களையும் பிரதிநிதித்துவ படுத்தும் வகையில் அமையும் போதே அக்கொடியினை ஏற்றுவதற்கு இணக்கம் தெரிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் உள்ள சிங்கள பாடசாலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற போது வட மாகாண கல்வி அமைச்சர் கே சர்வேஷ்வரன் தேசிய கொடியை ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவரின் இத்தகைய செயலுக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் வே இராதாகிருஷ்ணன் எதிர்ப்பினையும் வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Add Comments