பல்கலைக்கழகத்தின் அனைத்துவாயில்களையும் மூடி பூட்டுப் போட்டதுடன் தமது கோரிக்கைகளை நிறை வேற்றக் கோரி கொட்டும் மழைக்கும் மத்தியில் மாணவர்கள் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
மேலும் நாட்டின் தலை வரான ஜனாதிபதி தமக்கு போலி வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
வவுனியா நீதிமன்றத்தில் நடந்த மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள், வவுனியா நீதிமன் றில் விசாரணைக்காக திகதி யிடப்பட்டிருந்த நிலையில் அவ் வழக்குகளை சட்டமா அதிபர் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றியிருந்தார்.
இவ்வாறு மாற்றப்பட்ட தமது வழக்குகளை மீளவும் வவுனியா மேல்நீதிமன் றுக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி குறித்த மூன்று அரசியல் கைதிகளும் தொடர் உண்ணாவிரதப் போராட்ட த்தை முன்னெடுத்திருந்தனர். இவர்களது இப் போராட்டத் திற்கு ஆதரவளித்து பல்வேறு தரப்பினரும் மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங் களை மேற்கொண்டிருந்தனர்.
அதன் ஒரு கட்டமாக யாழ். பல்கலைக்கழக மாணவர் களும் உண்ணாவிரதப் போரா ட்டமொன்றை ஆரம்பித்திரு ந்தனர். இதன்போது வட மாகாண ஆளுநர் ஜனாதி பதியுடன் சந்திப்பொன்றை ஏற்படுத்தி ஜனாதிபதியூடனான கலந்துரையாடல் மூலம் தீர்வு பெற்றுத் தருவ தாகக்கூறி யாழ்.பல்கலை க்கழக மாணவர்களை ஜனா திபதியிடம் சந்திக்க அழை த்துச் சென்றிருந்தார்.
இதன்படி ஜனாதிபதி செய லகத்தில் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற யாழ்.பல் கலைக்கழக மாணவர்க ளுடனான சந்திப்பில் அரசி யல் கைதிகளின் உண்ணா விரதப் போராட்டத்தை நிறுத்தி அவர்களது கோரிக்கை தொட ர்பில் சாதகமான முடிவொன்றை கடந்த 25 ஆம் திகதி வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.
ஜனாதிபதியுடனான இச் சந்திப்பில் திருப்தியடையாத யாழ்.பல்கலைக்கழக மாண வர்கள் ஜனாதிபதி கோரிய காலப்பகுதிக்குள் தீர்வு முன் வைக்கப்படும் வரை தமது கற்றல் செயற்பாடுகள் அனை த்தையும் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர். அத்துடன் அக் காலப்பகுதியில் அரசி யல் கைதிகளின் விடு தலையை வலியுறுத்தி கிழக்கு பல் கலைக்கழக மாணவர்களை யும் இணைத்து பாரிய கையெ ழுத்துப் போராட்டத்தையும் மேற்கொண்டிருந்தனர்.
எனினும் கடந்த 25ஆம் திகதி ஜனாதிபதி தான் கூறி யது போன்று எந்தவித மான தீர்வுகளையும் அர சியல் கைதிகளின் விடயம் தொடர்பாக அறிவித்திருக்க வில்லை. அதனைத் தொட ர்ந்து அமைச்சர் சுவாமிநா தன், சட்டமா அதிபருக்கும் நீதியமைச்சருக்கும் இடை யில் முக்கிய சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாகவும் அதன் முடிவில் கடந்த வெள் ளிக்கிழமைஇப்பிரச்சினை தொடர்பாக சாதகமான முடி வொன்றை பெற்றுத்தருவ தாக மாணவர்களுக்கு உறு தியளித்திருந்தார்.
இவ்வாறான நிலையில் யாழ்.பல்கலைக்கழக மாண வர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இரண்டு உறுதி மொழிகளும் நிறைவேற்ற ப்படாத நிலையிலேயே நேற் றையதினம் யாழ்.பல்கலை க்கழகத்தின் அனைத்து கற்றல் செயற்பாடுகளையும் முடக்கியிருந்தனர்.
இதன்படி நேற்றுக் காலை 6 மணியளவிலே யாழ். பல்கலைக்கழகத்தின் அனை த்து வாயில் கதவுகளுக்கும் பூட்டுப்போட்டு மூடியிருந்த னர். இதனால் பல்கலைக் கழகத்திற்குச் சென்ற மாண வர்களும் நிர்வாக உத்தி யோகத்தர்களும் உட் செல்ல முடியாது வீதியில் நின்றனர். மழை கொட்டிக்கொண்டி ருந்த போதும் மழையில் நனைத்தபடி பல்கலை க்கழக நிர்வாக உத்தியோக த்தர்களும் மாணவர்களும் வீதிகளிலும் நீண்டநேரம் காத்திருந்தனர்.
ஜனாதிபதி எமக்கு வழங் கிய உறுதிமொழியை நிறை வேற்றாது எம்மை ஏமாற்றி விட்டார். அவருடைய சந்திப் பின் போது \'நீங்கள் யாழ்ப் பாணத்திற்குச் செல்வதற்கு முன்னர் தீர்வு கிடைக்கும் என்று கூறினார்” ஆனால் அவர் கோரிய கால அவகாச த்தைத் தாண்டிய பிறகும் எதுவும் இடம்பெறவில்லை. ஒரு நாட்டின் அரச தலை வராக இருக்கும் அவர் இவ் வாறு போலியான வாக்குறு திகளை வழங்கி ஏமாற்றியுள்ளார்.
குறிப்பாக அரசாங்க தரப் பில் கூறப்படும் காரணமான சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் என்பது, இவ் வழக்கில் ஏற் கனவே கைது செய்யப்பட்டு அரசதரப்பு சாட்சியங்களாக மாற்றப்பட்ட மூன்று பேரு க்கே ஆகும். இம் மூன்று பேரும் சந்தேகநபர்களாக இருந்து அரசதரப்பு சாட்சி யாக மாற்றப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டி ருந்தனர். அவ்வாறு பிணை யில் விடுவிக்கப்பட்ட அம் மூவரும் எவ்வாறு நாட்டை விட்டு வெளிநாட்டிற்குச் சென்றிருக்க முடியும்?
அதேபோன்று தற்போது அந்நாட்டில் புகலிடம் கோரி யிருக்கும் அவர்கள் எவ் வாறு மீண்டும் நாட்டிற்கு வந்து சாட்சியமளிக்கப் போகி ன்றார்கள்? எமது வினாக்க ளுக்கு அரசாங்கம் பதில ளித்தாக வேண்டும். இவ் வாறு அரசாங்கம் தொடர்ச் சியாகப் பொய்யான காரண ங்களைக் கூறிவருகின்றது.
இத்தகைய நிலையி லேயே நாம் இப்போரா ட்டத்தை ஆரம்பித்துள்ளோம். எமது இப் போரட்டத்திற்கு ஜனாதிபதி மதிப்பளித்து உட னடியாக உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதி களின் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும். அவ்வாறு தீர்வு வழங்காது விட்டால் எமது போராட்ட மானது தொடர்ந்து முன் னெடுக்கப்படும் என்பதுடன் சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள் ஆகியோரை ஒன்றிணைத்து அரச இயந் திரத்தை முடக்குவதற்கான போராட்டங்களையும் முன் னெடுப்போம் என மாண வர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதேவேளை மாணவர் களும் பல்கலைக்கழக உத்தி யோகத்தர்களும் வீதிகளில் நின்றிருந்ததால் யாழ்.பல் கலைக்கழக வீதியூடான போக்குவரத்து முற்றாகப்பாதி ப்படைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.