அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது வழக்கு விசாரணைகளை மீளவும் வவுனியா மேல் நீதி மன்றுக்கு மாற்றுமாறு கோரி வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்றைய தினம் எடுத்துக் கொள்ளப்பட்டவில்லை.
இந்த நிலையில் குறித்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளி யாகியுள்ள நிலையில் இது தொடர்பில் சிவாஜிலிங்கத்தோடு தொடர்பு கொண்டு கேட்ட போது, தன்னால் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை என்றார்.
தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகள் வவுனியா மேல்நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் அந்த வழக்கு விசாரணை களை திடீரென அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றியிருந்தது.
இதனை எதிர்த்து தமிழ் அரசியல்கைதி கள் மூவர் ஒரு மாத காலத்திற்கு மேலாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இந்த வழக்குகளை மீளவும் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றுமாறு சிவாஜிலிங்கம் சட்டத்தரணியூடாக மேல் நீதிமன்றில் மீளாய்வு மனுவொன்றை தாக்கல்செய்திருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு எடு த்துக் கொள்ளப்பட்ட போது மனுதாரர் தரப் பில் சட்டத்தரணிகள் தோன்றாத காரணத் தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.