
கலந்துகொண்ட சிறிதரன் கல்வி அமைச்சு மீதான விவாதத்தில் வடமாகான கல்வி அமைச்சர் தேசியக்கொடி ஏற்ற மறுத்த விடயம் தொடர்பாக மிகக்காரசாரமான உரையொன்றை பாராளுமன்றத்தில் ஆற்றியபோது கடந்த வரவுசெலவு திட்டத்திற்கு எமது தன்மானம்,சுயமரியாதை இழந்தே வாக்களித்தோம் எனத்தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய சிறிதரன் அண்மையில் வடமாகாண கல்வி அமைச்சர் தேசியக்கொடியேற்ற மறுத்தமை தொடர்பாக கருத்து தெரிவித்தபோது, ஒரு சந்தர்ப்பத்தில் வாளேந்திய சிங்கம் தமிழர்களை நோக்கியே தனது ஆக்ரோசத்தை காட்டுவதாகவும் தமிழர்மீதான வெறுப்பின் அடையாளமாக சித்தரிக்கப்படுவதுபோல் உள்ளதெனவும் இந்த தேசியக்கொடி இந்த நாட்டின் தமிழ் மக்களை அரவணைத்துச் செல்லவில்ல எனவும் குறிப்பிட்டார் .