இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகர்ப்பகுதியில் அண்மைக்காலமாக அதிகளவான கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு வரும் நிலையில், சிவில் உடையில் பொலிஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொது மக்களை சிவில் உடையில் சோதனையிடும் போது, அவர்களை பொலிஸார் என அடையாளம் காணமுடியாமையால் மக்கள் பொலிஸாருடன் முரண்பாட்டுக் கொள்ளும் நிலை ஏற்படுகின்றது.
இவ்விதமாக இன்று மதியம் பேரூந்துக்காக காத்திருந்த பொதுமக்களை சிவில் உடையில் நின்ற பொலிஸார் சோதனையிட முற்பட்ட போது, முரண்பாடு தோன்றியுள்ளது.
இதனையடுத்து, தம்முடன் முரண்படுவோர் மீது பொலிஸார் தாக்கியுள்ளதுடன் அதிகளவானோர் பார்த்திருக்க அவர்களை பொலிஸ் நிலையத்திற்கும் அழைத்து செல்கின்றனர்.
எனவே, தேவையில்லாத குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.