மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு, தொடர்ந்தும் ராஜதந்திர சேவையில் ஈடுபட்டு வரும் உயர் இராணுவ அதிகாரிகள் இவ்வாறு அழைக்கப்பட உள்ளனர்.
அமைச்சரவையின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் அறுபது நாள் திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச விசாரணை அறிக்கையை ஒத்தி வைக்கவும் உள்ளக விசாரணைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சர்வதேச விசாரணைகளின் மூலம் படைவீரர்களுக்கு பாரியளவு ஆபத்து ஏற்படக் கூடிய அபாயம் காணப்பட்டது. தற்போது அந்த ஆபத்து நீங்கியுள்ளது.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ராஜதந்திர சேவையில் ஈடுபட்டுள்ள இராணுவ அதிகாரிகளை மீள அழைப்பதற்கு ஜனாதிபதியியின் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது என அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.