தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கம். அந்த அமைப்பு தேர்தல் அரசியலில் ஈடு படாது என்று ஏலவே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மிகவும் தெளிவானது.
இந்நிலையில் தமிழ் மக்கள் பேரவைக் கான தமிழ் மக்களின் ஆதரவு உள்நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் நிறையவே உண்டு.
இதனைப் பல சந்தர்ப்பங்களில் தமிழ் மக்கள் பேரவை நிரூபித்துள்ளது. அந்த நிரூபணம் அனைத்தும் தமிழ் மக்களின் நலனுக் கானது என்பது மறுக்கமுடியாத உண்மை.
அதேநேரம் தமிழ் மக்களின் உரிமைசார் விடயங்களை அறுதியிட்டுக் கூறவேண்டும் என்பதிலும் தமிழ் மக்கள் பேரவை மிகவும் உறுதியாகவும் தெளிவாகவும் இருக்கிறது.
இந்நிலையில் தமிழ் மக்கள் பேரவையை எப்பாடுபட்டாவது உடைத்துச் சின்னாபின்ன மாக்கிவிட வேண்டும் என்பதில் சில தரப்பினர் கடும் பிரயத்தனம் செய்து வருகின்றனர்.
இதில் சில வெளிநாட்டு இராஜதந்திரிகளும் ஈடுபட் டுள்ளதாகத் தெரியவருகிறது.
தமிழ் மக்கள் பேரவை மக்கள் இயக்கமாக இருப்பதால், அதன் இயங்கு நிலை கண்டு பயம் கொள்வோரும் இருக்கவே செய்கின்ற னர். எனினும் இப்பயம் அர்த்தமற்றது.
ஏனெனில் தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல. அது தமிழ் மக்களின் உரிமையை, நலனை, அதி காரத்தை நிலைநாட்டுவதற்கானது.
தமிழ் மக்களின் நலன்சார்ந்து நூறு வீதம் செயற்படும் இந்த அமைப்பின் இணைத்தலை வர்களில் ஒருவராக வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர் கள் உள்ளார். தமிழ் மக்கள் அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுள்ளனர்.
தமிழினத்துக்கு நடந்த அநியாயங்களை தனது உரைகள் மூலம் துலாம்பரப்படுத்துவது டன் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடமும் தமிழ் மக்களின் சமகால நிலையை முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் எடுத்துரைத்து வருகிறார்.
இந்நிலையில் தமிழ் மக்கள் பேரவையை பலம் குறையச் செய்தாக வேண்டும் என தமி ழின விரோத சக்திகள் தீர்மானித்துள்ளன.
அதற்காக புதுப்புது வியூகங்களை அமை த்து பேரவையை சின்னாபின்னப்படுத்துவதற் கான முயற்சிகளில் கடுமையாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக் கான வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்தது டன் தமிழ் மக்கள் பேரவையை வலுக்குறைப் புச் செய்வதற்கான அத்தனை முயற்சிகளும் அரங்கேறத் தொடங்கியுள்ளன.
இருந்தும் தமிழ் மக்கள் பேரவையில் இடம் பெற்றுள்ளவர்கள் தூய சிந்தனையோடு தங் கள் பணியைச் செய்கின்றனர்.
தமிழ் மக்கள் பேரவையை அசைப்பதற்கு எவராலும் முடியாது என்று அறுதியிட்டுக் கூறும் அளவில் அந்த அமைப்பை தமிழ் மக்கள் தாங்கி நிற்கின்றனர்.
ஒரு கணப்பொழுதில் பல்லாயிரக்கணக் கான தமிழ் மக்களை ஒன்றுகூடச் செய்து உரி மைக்காகக் குரல் கொடுக்கக்கூடிய அமைப்பாக இது இருப்பதும் சிலருக்கு பெரும் இடைஞ்சலே.
எது எவ்வாறாயினும் தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கம். அது தான் முன் னெடுக் கும் அத்தனை விடயங்களையும் எந்த இரகசி யமும் இன்றி மக்கள் முன் வைக்கும்.