இலங்கையின் வடக்கு மக்களு க்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்ப தற்கு தாம் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையென, ஒன்றி ணைந்த எதிரணியின் நாடாளும ன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய அரசியல் யாப்பு தொடர்பான
இடைக்
கால அறிக்கை குறித்த விவாதம், அனைத்து நாடாளுமன்ற உறுப்பி னர்களினதும் வேண்டுகோளுக்கு இணங்க நேற்று புதன்கிழமை ஐந் தாவது நாளாகவும் அரசியலமை ப்பு நிர்ணய சபையில் இடம்பெற் றது. இவ்விவாதத்தில்
பங்கேற்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்
”இலங்கையில் நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குமாறு நாம் இடைக்கால அறிக்கை குறித்த விவாதம், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களி னதும் வேண்டுகோளுக்கு இணங்க நேற்று ஐந்தாவது நாளாகவும் அரசியலமைப்பு நிர் ணய சபையில் இடம்பெற்றது.
இவ்விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட் டார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
இலங்கையில் நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குமாறு நாம் ஆரம்பத்திலிருந்து கூறி வரு கின்றோம்.
குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன் னர் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யின் மத்திய செயற்குழு கூட்டத்திலும் இவ்விட யத்தைக் கூறியிருந்தேன்.
அதன் பின்னர், மத்திய செயற்குழு கூட்ட த்தில் பங்கேற்க எனக்கு அனுமதி வழங்க ப்படவில்லை.
அத்தோடு, வடக்கு மக்களுக்கு அதிகாரங் களை வழங்குவதில் எமக்கு எந்தவித பிரச்சி னைகளும் கிடையாது. அம் மக்களுக்கு கிடைக்கவேண்டிய விடயங்கள் கிடைக்க வேண்டும்.
அவை மக்களுக்கு கிடைக்க வேண் டுமே தவிர, அரசியல் கட்சிகளுக்கு கிடைக் கக் கூடாதென்றே நாம் கூறி வருகின்றோம்.
எவ்வாறெனினும், அதிகாரமோ சமஷ்டி யையோ அம்மக்கள் கேட்கவில்லை.
அவர்களுடைய சொந்த நிலங்களை மீளக் கையளிக்கமாறும் பொருளாதாரத்தை மேம் படுத்துமாறே கோருகின்றனர்.
இவற்றை வைத்து நோக்கும்போது, புதிய அரசியல் யாப்பானது, இலங்கை மக்களுக்கு நன்மை பயப்பதாக இல்லை. அது சர்வதேச த்தின் தேவைக்காகவே கொண்டுவரப்பட வுள்ளது என்றார்.