ஒரு நாட்டில் மிகப்பெரும் அக்கிரமங்கள், அநியாயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனால் சீற்றமடைந்த கடவுள் அந்த நாட்டை அழித்துவிடுமாறு தனது பரிவாரங்களை அனுப்பி வைத்தார்.
கடவுளின் உத்தரவுக்கமைய அந்த நாட்டை அழிப்பதற்காக பரிவாரங்கள் தேவலோகத்தில் இருந்து அந்த நாட்டுக்குச் செல்கின்றன.
அவர்கள் வந்திறங்கிய இடத்தில் ஒரு வழி பாட்டுத் தலம். அதில் ஒரு பெரியவர் சதா கட வுளை வழிபட்ட வண்ணம் இருக்கிறார். அவ ரின் தோற்றத்தில் தெய்வீகப் பொலிவு தெரிகிறது. அவரைக் கண்ட மாத்திரத்தில் நாட்டை அழிக்க வந்தவர்கள் திகைத்துப் போயினர்.
கடவுளை சதா வழிபடும் இந்த பெரியவரை யும் கொல்வதா? இந்த ஐயம் ஏற்பட்டதும் வந்த பரிவாரங்கள் திரும்பிச் சென்று கடவுளைச் சந்தித்தன.
சுவாமி உங்கள் கட்டளைப்படி அந்த நாட்டை அழிக்கச் சென்றோம். ஆனால் அங்கு ஒரு பெரியவர் தங்களைத் தொழுத வண்ணம் இருக்கிறார். அவரையும் கொல்வதா சுவாமி என்றனர்.
இதனைக் கேட்ட கடவுள் அந்தப் பெரிய வரைத்தான் முதலில் கொல்லுங்கள் என்றார்.
திகைத்துப்போன பரிவாரங்கள் சுவாமி ஏன்? அப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டன. அதற்குக் கடவுள் பின்வருமாறு பதிலளித்தார்.
நாட்டில் அக்கிரமமும் அநியாயமும் நடந்து கொண்டிருக்கும்போது என்னை தொழுவதால் என்ன பயன்? தர்மம், நீதி, நியாயம் தெரிந்த அந்தப் பெரியவர் அவற்றை மக்களுக்கு எடுத் துரைத்து மக்களை நல்வழிப்படுத்தியிருக்க வேண்டும்.
ஆனால் அதனை அவர் செய்யத் தவறி விட்டார். உண்மை, நீதி, நியாயம், தர்மம் தெரிந் தவர்கள் பேசாதிருந்தால் அது பெரும் பாவம். ஆகையால் அந்தப் பெரியவரை முதலில் கொல்லுங்கள் என்றார் கடவுள்.
இதைக் கேட்ட பரிவாரங்கள் கடவுளின் உத்தரவை நிறைவேற்ற மீண்டும் அந்த நாட்டுக் குச் சென்றன.
இச்செவிவழி கதை நமக்கு ஓர் உண் மையை எடுத்தியம்புகிறது. அதாவது அநியா யம் நடக்கிறது என அறியும்போது அல்லது எக்காலத்திலும் அக்கிரமம், அநியாயம் நடக் கக்கூடாது என்பதற்காக அறத்தை, அன்பை, மனுநீதியை எடுத்தியம்புவது கற்றறிந்தார் கடமை.
அதைச் செய்யத் தவறும்போது அதனால் கேடு நடக்கும். அந்தக் கேடு மக்கள் சமூகத் தைப் பாதிக்கும்.
ஆகவே எப்போதும் உண்மைக்காகக் குரல் கொடுப்பதும் பொது நீதியை, சமூக நீதியை ஏற்படுத்துவதற்காகப் பாடுபடுவதும் கற்றவர் கள், புத்திஜீவிகள், மதத் தலைவர்கள், பெரிய வர்கள், அனுபவஸ்தர்கள் ஆகியோரின் தலை யாய கடமையாகும்.
அந்தவகையில் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலின்போது வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகத்தில் செயல்திறன்மிக்க உள்ளூராட்சி சபைகள் அமைவதற்கு எத்தகைய பொறி முறைகளைக் கையாள வேண்டும் என்பதை மேற்குறித்த பெரியவர்கள் துணிந்து கருத்து ரைக்க வேண்டும்.
இதைவிடுத்து தேர்தல் நடக்கும்வரை மெள னமாக இருந்துவிட்டு, தேர்தல் முடிந்து சபை களில் பதவியேற்று அவை செயலற்று இருக் கும்போது குறைகூறுவது என்பது மிகப் பெரும் பாவச் செயலாகும்