பௌத்த மத விஸ்தரிப்பு வடக்கில் சலுகையளிப்புக்கள் வாயிலாக வீரியம் பெறுகின்ற நிலையில் இதற்கு ஆளுநர் முழுமையாகப்பாடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாகவே யாழ்ப்பாணத்தில் முன்னைய காலங்களில் தாபிக்கப்பட்ட பௌத்த பாடசாலைகள் மீள வசதிகளுடன் கட்டியெழுப்பப்படுகின்றதென அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக புத்தூர் பஞ்சசீக வித்தியாலயம் மீது இலங்கை அரசு காட்டிவரும் அதீத அக்கறை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.
இப்பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கு ஏனைய மாணவர்களைக்காட்டிலும் சலுகைகள் வழங்கப்பட்டு அங்கு பௌத்தம் ஊடான சிங்கள மயமாக்கம் வெற்றிபெறச்செய்யப்படுகின்றது. யாழின் சில பகுதிகளில் நிலவும் அதி குடும்ப கஸ்டம், சாதிய ரிதியிலான ஏற்றதாழ்வுகள் பௌத்த சிங்களத்தினை மக்களிடத்தில் கொண்டு செல்ல எத்தனிப்போருக்கு வாய்ப்பாகவுள்ளதாகவும் அத்தரப்புக்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இது பாரிய விளைவினை தரக்கூடியது. ஆக்கிரமிப்பு விகாரைகளைக்காட்டிலும் சமூகத்தில் இலகுவாக சிங்கள பௌத்த மயமாக்கத்தினை ஏற்படுத்தக்கூடியது.
இத்தகைய நடவடிக்கைகளில் வடக்கு ஆளுநர் முன்னின்று செயற்படுவது திட்டமிட்ட அரசின் நோக்கமென அம்பலமாகியுள்ளது.