வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியையும் ஏனைய ஏழு மாகாணங்களில் சிங்கள மொழியையும் உத்தியோகபூர்வ மொழியாக பயன்படுத்தப்படும் விதத்தில் அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உத்தேச புதிய அரசியலமைப்பில் ஒருமித்த நாடு - பிரிக்கப்படமுடியாத நாடு என்பதனை நாம் ஏற் றுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
உத்தேச புதிய அரசியலமைப்பில் ஒரு மித்த நாடு - பிரிக்கப்பட முடியாத நாடு என்பதை நாம் ஏற்றுள்ளோம் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
புதிய அரசியலமைப்பு எல்லா இனத்த வருக்கும் நீதி, நியாயம் கிடைக்கக்கூடியதாக அமைய வேண்டும். எந்த ஒரு இனமும் அதனால் பாதிக்கப்படக் கூடாது.
அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
அரசியலமைப்பில் உத்தியோகபூர்வ மொழிகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
9 மாகாணங்களுள் 7 மாகாணங்களில் சிங்க ளம் உத்தியோகபூர்வ மொழியாக இருக்கும். வடக்கு -கிழக்கு மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாக இருக்கவேண்டும்.
சில பிரதேச செயலக பிரிவுகளில் மக்கள் தொகை விகிதாசாரத்துக்கேற்ப தேவையான மொழி பயன்படுத்தப்படலாம்.
திருகோணமலை மாவட்டத்தில் 75 வீதத்துக்கும் அதிகமானோர் தமிழை தாய் மொழியாக கொண்டுள்ளனர். அரசியலமைப்பின் அடிப்படையில் இங்கு பணிபுரியும் உத்தி யோகத்தர்கள் தமிழ் மொழியில் பணியாற்றக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
நாட்டில் அமைதி, சமத்துவம் நிலவ அர சியலமைப்பில் குறிப்பிடப்பட்ட இவ்வாறான விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.