
எதற்கும் நாம் தயார் என்று காட்டும் வகையில், சகபயணிகள் பெரும் களோபரத்தில் ஈடுபட்டார்கள். இச்செயலை கண்டித்து கிளிநொச்சியில் உள்ள ஏனைய தமிழர்களும் போராட்டங்களில் குதித்ததால் பெரும் பதற்ற நிலை தோன்றியது. இதனை அடுத்து. முழங்காவிலில் உள்ள தமது கஜபாகு படையணி தலைமையகத்திற்குள் ராணுவத்தினர் ஓடிவிட்டார்கள்.
அங்கு வந்த பொலிசார் மக்களிடம் என்ன நடந்தது என்று கேட்டு. உடனடியாக கஜபாகு படையணி தளம் சென்று குறித்த நபரை கைதுசெய்துள்ளார்கள். இலங்கை வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் (உடனே இடம்பெற்றது) இது தான் முதல் தடவை என்றும் கூறலாம். கைதான சிங்கள சிப்பாய் தற்போது தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. கிளிநொச்சி பொலிசாரில் சில தமிழர்களும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம்.