தமிழ் இளைஞர்களின் மனநிலையை தமிழ் அரசியல்வாதிகள் புரிய வேண்டும்


தேர்தலில் வெற்றி பெறுவது, அதற்கான வாக்கு வங்கி ஒன்றைத் தொடர்ந்து பாதுகாப் பது, உள்ளூராட்சி சபை உறுப்பினராக இருந் தால் அடுத்த முறை மாகாண சபை உறுப்பின ராக வருவது, மாகாண சபை உறுப்பினராக இருந்தால் எப்பாடுபட்டாவது அடுத்த தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினராவது, அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபடுவது இந்த இல க்கை அடைவதற்காக யார் யாரையயல்லாம் பந்தம்பிடிக்க வேண்டுமோ அவர்களைப் பந்தம் பிடிப்பது என்பதாகவே இன்றைய தமிழ் அரசி யல் நிலைமை உள்ளது.

தமிழ் மக்களின் உரிமை, தமிழ் மக்களின் வாழ்வியல் பற்றி எந்தச் சிந்தனையும் தமிழ் அரசியல்வாதிகளிடம் இல்லை எனலாம்.
இதன்காரணமாக நம் தமிழ் இளைஞர்கள் மிகுந்த வெறுப்பு நிலையில் உள்ளனர் என்பதே உண்மை.

எனினும் அதுபற்றி எதுவும் அறியாதவர் களாக தமிழ் அரசியல்வாதிகள் இயங்குவது எதிர்காலத்தில் மிகமோசமான எதிர்விளைவு களை ஏற்படுத்தும் என்பது சர்வநிச்சயம்.
ஒரு பெரும் விடுதலைப் போராட்டம் தோற்றுப் போனதன் பின்பு தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னை அடையாளப்படுத்தியதாயினும் அவர் கள் ஆட்சியாளர்களுடன் சேர்ந்து போவதும் ஆட்சியாளர்களைக் காப்பாற்றுவதுமே தமது மிகப்பெரிய பணி என்பது போல நடந்து கொண்டனர்.

இத்தகைய போக்கு தமிழ் இளைஞர்களி டம் மிகுந்த வெறுப்பையும் விரக்தியையும் ஏற் படுத்தியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டங்கள் நடக்கின்ற வேளைகளில் அங்கு செல்கின்ற இளைஞர்கள் தமிழ் அரசியல்வாதிகளிடம் கேட்கின்ற கேள்விகள் அவர்களைத் திக்கு முக்காடவைக்கிறது.

இப்படியே நிலைமை கடந்து செல்லுமாக இருந்தால் தமிழ் மீது; தமிழ் மக்கள் மீது பற் றும் பாசமும் கொண்ட இளைஞர் சமூகம் அந் நிலையில் இருந்து மெல்ல மெல்ல விலகி வேறொரு பாதையில் தமது கவனத்தை - ஆர் வத்தைச் செலுத்துவர்.
இது சமகால அரசியல்வாதிகளுக்கு ஆறு தலையும் நிம்மதியையும் தரலாம். ஆனால் எங்கள் தமிழுக்கும் எங்கள் தமிழ் இனத்துக் கும் இதுவே பேரிழப்பாக அமையும்.
ஆகையால் தமிழ் இளைஞர்களின் மன நிலையை அரசியல்வாதிகள் உணர்ந்து செயற் பட வேண்டும்.

அரசியல்வாதிகளால் எங்கள் தமிழ் இளை ஞர்களின் மனநிலையை உணரமுடியவில்லை என்றால், எங்கள் மூத்தவர்களாவது தமிழ் இளைஞர்களின் இனம், மொழிப்பற்றுக்கு உற் சாகம் கொடுத்து அவர்கள் தமிழ் உணர்வோடு; தமிழ் இனப்பற்றோடு வாழ்வதற்கு வழி செய்ய வேண்டும்.

அதில் ஒரு முக்கிய விடயமாக தமிழ் இளை ஞர்களை நேர்மையான அரசியல் பாதைக்கு அழைத்து வருவதாகும்.
இந்தப் பணியைச் செய்ய உள்ளூராட்சி சபைத் தேர்தலை பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனமாகும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila