தமிழரசுக்கட்சி ஊடகப்பேச்சாளர் எம்.சுமந்திரன் புதிய அரசியல் உத்தியோகப்பற்றற்று அமைச்சு பதவியினை ஏற்றிருப்பதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொழும்பிலிருந்து வெளியாகும் முன்னணி நாளிதழான டெயிலி மிரர் இலங்கைக்கான ஜெர்மனிய தூதர் சந்திப்பில் அமைச்சரான சுமந்திரன் பங்கெடுத்ததாக செய்தி வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து முன்னணி தொலைச்காட்சி ஊடக வலையமைப்பு நிறுவனமான மகாராஜா இதனை வெளிப்படுத்தி சுமந்திரனிற்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் முன்னாள் ஊடகப்பேச்சாளரான சுரேஸ்பிறேமச்சந்திரன் இதுவொன்றும் இரகசியமான விடயமல்லவென தெரிவித்தார்.
இலங்கை அரசை ஒவ்வொரு நிமிட நேரத்திலும் பாதுகாப்பதை மட்டுமே கொண்டிருப்பவராக சிங்கள அமைச்சர்களை தாண்டி உண்மையாக செயற்படுபவர் சுமந்திரன் மட்டுமே.
இலங்கையினை உள்நாடு தாண்டி ஜெனீவா வரை சென்று காப்பாற்றிய பெருமை சுமந்திரனை சாரும்.இதுவரை அமைச்சராக இல்லாது பணியாற்றிய அவர் தற்போது புதிய பதவியை ஏற்றுக்கொண்டு அரசிற்காக வெளிப்படையாக பணியாற்றுவதே பொருத்தமானதெனவும் அவர் தனது ஆலோசனையினை தெரிவித்தார்.