வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தகவல் பெறும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தகவல்களைப் பெற விண்ணப்பப்படிவங்கள் விநியோகிக் கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.
|
வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்மாடி குடியிருப்புக்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு பொலிஸாரால் வழங்கப்படும் விண்ணப்பப்படிவம் போர்க் காலத்தில் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவங்களை ஒத்ததாக உள்ளதாகவும், தகவல்கள் சேகரிக்கப்படுதல் தொடர்பில் அச்சம் ஏற்படுவதாகவும் பொது மக்கள் முன்வைக்கும் கருத்து தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கபில விஜேமான்னவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:
தகவல் சேகரிப்பு முறைமை வெள்ளவத்தையில் மட்டுமன்றி நாடளாவிய ரீதியில் நடைமுறையில் உள்ளது. நாம் வெளிநாட்டில் இருந்து வந்து இங்கு தங்கியுள்ளவர்கள், இங்கு நிரந்தரமாக தங்கியுள்ளவர்கள், தற்காலிகமாகத் தங்கியுள்ளவர்கள் என்று அனைவரது தகவல்களையும் பெற்றுக்கொள்வதற்காகவே இந்த விண்ணப்பப் படிவத்தை வழங்கியுள்ளோம்.
பல சந்தர்ப்பங்களில் வெளிநாட்டில் இருந்து வந்து இங்கு தங்கியிருந்த பலர் குற்றங்களைப் புரிந்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ள சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவை போன்ற விடயங் களில் இருந்து பொது மக்களைக் காக்க வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது.
பொது மக்களின் பாதுகாப்பையும் பாதுகாப்பான சூழலையும் உறுதி செய்யவே இந்தத் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. பொது மக்கள் தகவல் சேகரிப்பு தொடர்பில் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை -– என்றார்.
|
வெள்ளவத்தையில் மீண்டும் பொலிஸ் பதிவு!
Add Comments