2009ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரின் போது இலங்கைப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றச் சாட்டுகளுக்கு தாம் கடுமையான நடவடிக்கை எடுக்கப் போவதாக பிரித்தானியாவின் பிரபுக்கள் சபையின் உறுப்பினர் நேஸ்பி பிரபு தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையின் படையினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போர்க்குற்றச் சாட்டுகளை மறுக்கும் வகையில் முன்னெடு க்கப்படும் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் உதவப் போவதாக பிரித்தானிய பிரபுக்கள் சபையின் உறுப்பினர் நேஸ்பி தெரிவித்து
ள்ளார்.
அண்மையில் தம்மை சந்தித்த சர்வதேச இலங்கை பேரவை உறுப்பினர்களிடம் அவர் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.
இந்த சந்திப்பு பிரித்தானிய நாடாளுமன்ற த்தில் இடம்பெற்றது.
இதில் இலங்கை பேரவையின் குழுவில் பிரசங்க ஜெயமான்ன, ஜெயராஜ் பலிஹவர் த்தன, வியட்நாமுக்கான முன்னாள் இலங்கை தூதர் இவான் அமரசிங்க ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
2009ஆம் ஆண்டு இறுதிப்போரின் போது 40ஆயிரம் பொதுமக்கள் இலக்கு வைத்து படையினரால் கொல்லப்பட்டனர் என்ற அடிப்படையிலேயே இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கான பொறி முறை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எனினும் படையினர் பொதுமக்களை இலக்கு வைத்து தாக்கவில்லை.
அத்துடன் போரின்போது 7000- 8000 பொதுமக்களே கொல்லப்பட்டனர் என்பது நேஸ்பியின் வாத மாகும்.
இந்தக்கூற்றை வலியுறுத்தும் வகையிலேயே இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான அமைப்புக்கள் நேஸ்பிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன.