யாழில் மற்றுமொரு ஊடகவியலாளர் மீதும் தாக்குதல்!

ven1
யாழ்ப்பாணத்தின் பொன்னாலை பகுதியில் வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்ற மாணவர்களிற்கு இலவச கல்வியை வழங்கிவரும் வெண்கரம் படிப்பகத்திற்குள் இன்றிரவு நபர்கள் சிலர் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.இத்தாக்குல்; முன்னாள் அரசியல் கைதியான ககோமகன், மற்றும் மூத்த ஊடகவியலாளர் ந.பொன்ராசா மீது இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இலங்கை காவல்துறையினர்; விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கார்த்திகை விளக்கீடு எனும் பெயரில் வீதியில் பொதுப்போக்குவரத்திற்கு இடையூறாக சிலர் ரயர் எரித்துள்ளனர். குறித்த வெண்கரம் நிறுவனம் முன்பதாக ரயர் எரிக்கப்பட்டிருந்த நிலையில் அதன வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இரு மாணவர்களை படிப்பகத்திற்குள் வருமாறு கூறியதுடன் ரயர் எரிக்கவேண்டாம் என முன்னாள் அரசியல் கைதியான ககோமகன், மற்றும் மூத்த ஊடகவியலாளர் ந.பொன்ராசா கோரியுள்ளனர்.இதனையடுத்தே அங்கு ரயர் எரித்த நபர்கள் படிப்பகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ven2
இதனிடையே தாக்குதல் நடத்தியவர்கள் து.சத்தியன், து.ரங்கன், இ.தர்சன் மற்றும் மேலும் சிலரென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முன்னாள் அரசியல் கைதியான ககோமகன், மற்றும் மூத்த ஊடகவியலாளர் ந.பொன்ராசா ஆகிய இருவரும் தொண்டு அடிப்படையில் அக்கல்வி நிலையத்தை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila