நல்லாட்சி பாதை தவறுகின்றது:யாழ்.ஆயர்!


9771589_orig

போர் முடிந்து பல ஆண்டுகளாகியும்; மக்களின் இயல்பு வாழ்வை மேம்படுத்துவதில் நல்லெண்ண அரசு வேகமாக செயற்படவில்லை. பல விடயங்களை இன்னும்; முழுமையாக ஆற்றவில்லை என திரும்ப திரும்ப குறை கூறவேண்டியே உள்ளதாக யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.தனது கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்து பிறப்பு பெருவிழா இன்று கிறிஸ்தவ உலகு மட்டும் கொண்டாடும் ஒரு விழாவாக இல்லாமல் உலக மக்கள் அனைவரும் கொண்டாடும் ஒரு உலகப் பெருவிழாவாக மாறிவிட்டது.
இந்த உலகப் பெருவிழாவைக் கொண்டாடும் அனைவருக்கும் ஆண்டவர் இயேசுவின் பிறப்பு விழா வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக. பூவுலகில் நன்மனது கொண்டோருக்கு அமைதி ஆகுக என வாழ்த்துகிறோம்.
கிறீஸ்து பிறப்பு பெருவிழா ஒரு மகிழ்ச்சியின் விழா. ஒரு அன்புறவின் உறவின் விழா. ஒரு ஒன்று கூடலின் விழா. குடும்பமாக – உறவுகளாக – நண்பர்களாக – பங்கு சமூகமாக இணைந்து குதூகலிக்கும் ஒரு விழா.
நமது இந்த கிறிஸ்து பிறப்பு பெருவிழாக் கொண்டாட்டங்;கள் அனைத்திலும் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையை தெளிவாக உணரவேண்டும். கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையை உறுதிப்படுத்த வேண்டும். கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற உண்மையை இவ்விழாவைக் கொண்டாடும் அனைவருக்கும் அறிவிக்க வேண்டும். இந்த உண்மைக்கு ஏற்ற விதமாக இவ்விழாவை அமைத்துக் கொள்ள வேண்டும். ஆடைகள் அறுசுவை உணவு பட்டாஸ் கோலங்கள் கொண்டாட்டங்கள் என மகிழ்ந்திருக்கும் போது அயல் வீட்டில் இவற்றைப் பெற முடியாதவர்கள் இருக்கிறார்கள் என்பதை மறக்காது பகிரக்கூடியவற்றை அவர்களோடு பகிர்ந்து மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவோம. கடவுள் நம்போடு இருக்கிறார் என்ற உண்மையை அவர்களும் உணரச்செய்வோம்.
இவற்றில் காணாமற்போனோர் விடயம் – அரசியற் கைதிகள் விடயம் – சொந்த நிலங்கள் விடுவிப்பு விடயம் என்பன முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டியன.
காணாமற் போனோர் விடயத்திற்கு உடன் முடிவு காணுங்கள். இறந்தவர்களை உயிர்ப்பிக்க முடியாது அதே வேளை உயிரோடு இருப்பவர்களை காலம் காலமாக மறைத்தே வைத்திருக்க முடியாது. மனித உயிர் சம்பந்தமான இப்பிரச்சனைக்கு இனியும் காலம் தாழ்;த்தாது உடன் முடிவு காணுங்கள். இறந்தவர்களுக்கு சமயக் கடமைகளை நிறைவேற்றி உறவுகள் தம் மனசுகளை ஆறுதற்படுத்தவும் இறந்தவர்களுக்கான இறப்பு சான்றிதழைப் பெறவும் இழப்பீடு பெறவும் வழி செய்யுங்கள்.
|
அரசியற் கைதிகளை உடன் விடுதலை செய்யுங்கள். அவர்கள் வாழ்வை சிறைக்கம்பிகளின் பின்னால் இனியும் வீணடிக்காதீர்கள். ஏற்கனவே மனதளவில் பாதிக்கப்பட்ட அவர்கள் முழுமையான விடுதலை பெற விரைவாக செயற்படுங்கள் என தமிழ் மக்கள் பெயரால் வேண்டுகிறோம்.
சொந்த நிலங்களில் மக்கள் சென்று குடியமர்ந்தால்தான் யுத்தம் முடிந்து விட்டதென மக்கள் மன அமைதி கொள்வர். மக்கள் குடியிருப்புக்களில் இருந்து இராணுவத்தை முழுமையாக அகற்றுங்கள். அவர்களுக்கு அரச காணிகள் நிறையவே உண்டு. போராட்டம் முடிந்தமையால் அவர்கள் தள்ளி இருப்பதே சிறந்தது.
இவற்றை செயற்படுத்த காலம் கடத்துவதால் எதுவும் நடைபெறப் போவதில்லை. நல்லெண்ண அரசு இந்த அடிப்படை வசதிகளை நேரகாலத்தோடு செய்து தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி இந்த நாட்டில் இனி வருங்காலத்தில் தமிழ் சிங்களம் என்ற இரு இனங்களும் இணைந்தே வாழவேண்டும் என்ற சமாதான சமிக்கையைக் காட்டி இருக்க வேண்டும்.
இன்று என்றுமில்லாத அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்க நிலமைகள் சாதகமாக இருப்பதால் தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு அரசியல் யாப்பில் உறுதிப்படுத்தப்பட்ட தீர்வினைக்காண அரசியலில் சம்மந்தப்பட்ட அனைவரும் அனைத்து வேறுபாடுகளையும் மறந்து உழைக்க வேண்டுமென அன்பு அழைப்பு விடுக்கிறோம்.
அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பின் இறையாசீர்மிக்க வாழ்த்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila