வவுனியாவின், உள்@ர் பேரு ந்து சேவைகளை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இரு வாரங்க ளுக்கு செயற்படுத்துவதற்கு முதல மைச்சர் உத்தரவிட்டுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் அமைச் சின் சிரேஷ்ட செயலாளர் திருமதி விஜயலட்சுமி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்று திங்கட் கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரி விக்கையில்,
வவுனியாவில் 195 மில்லியன் ரூபாய் பெறுமதியில் புதிய பேருந்து நிலையமானது கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டு செயற் படாத நிலையில் காணப்பட்டிருந்தது.
இந் நிலையில் போக்குவரத்து அமைச் சராக வட மாகாண முதலமைச்சர் பொறுப்பேற் றதன் பின்னர் புதிய பேருந்து நிலையத் தினை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத் ததன் பிரகாரம் 25 ஆம் திகதியில் இருந்து தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் சேவையில் ஈடுபடவேண் டும் என உத்தரவிட்டிருந்தார்.
அத்துடன் பழைய பேருந்து நிலையத் தினை மூடுவதற்கான ஏற்பாடுகள் 24 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியில் இருந்து எடுக்குமாறும் வட மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கடிதம் மூலம் தெரிவித் திருந்தார்.
தனியார் பேருந்து உரிமையாளர்கள் தமது நிலைப்பாட்டை தெரிவித்த நிலையிலும் வர்த்தகர் சங்கத்தின் கருத்தை ஏற்று உள் @ர் சேவையினை பழைய பேருந்து நிலை யமான இ.போ.ச பேருந்துகள் சேவையில் ஈடு படும் இடத்தில் இருந்து முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகளை செய்து தருமாறு இணைந்து கேட்டுக்கொண்டனர்.
இதற்கான கால அவகாசமாக இன்று காலை 10 மணி வரை வழங்கப்பட்ட நிலை யில் செயலாளர் உள்ளடங்கிய குழு உடனடி யாக முதலமைச்சருடன் கலந்துரையாடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபட தனியாருக்கு இடம் ஒதுக்கி கொடுக்கப்படும் என தனியார் பேருந்து உரி மையாளர்களுக்கு உத்தரவாதம் அளிக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பான நடவடிக்கைகளை வவு னியா நகரசபையின் செயலாளர் முன்னெ டுக்கவேண்டும் என அவர் மேலும் தெரி வித்திருந்தார்.