திறந்த இதய சத்திரசிகிச்சை ஏழை மக்களுக்கான வரப்பிரசாதம்


சிவனுக்கு வைத்தியநாதன் என்றொரு நாமம் உண்டு. மருத்துவத்துக்கு அவன் தலை வன் என்பதால் அவனுக்குரிய ஓராயிரம் நாமங்களில் இதுவும் ஒன்றாயிற்று.

உயிர்களைக் காக்கவல்லவன் இறைவன். அந்த இறைவன் கடவுள் உருக்கொண்டு நேரே வந்து சிகிச்சை அளிப்பவன் அல்ல.

மாறாக மருத்துவர்களின் வடிவில் கடவுள் உயிர் காக்கும் தன் பணியைச் செய்கின்றான்.
இதனாலேயே மருத்துவர்கள் கடவுளுக் குச் சமமானவர்கள் என்று போற்றப்படுகின்ற னர்.
இறைவனுக்கு நிகரான மருத்துவர்கள், என்றும் தங்கள் பணியை இறை பணியாக நினைத்து சேவையாற்ற வேண்டும்.

அதுவே மருத்துவப் பணியைத் தந்தருளிய இறைவனுக்கு ஒவ்வொரு மருத்துவர்களும் செலுத்தும் நன்றிக் கடனாகும்.

எனினும் மருத்துவர்கள் சிலர் வைத்தியத் தொழிலை பணம் உழைக்கும் தொழிலாக நினைக்கின்றனர். இது வேதனைக்குரியது.
பணமும் பொருளாதார பலமும் இல்லாமல் வாழ முடியாது என்பது நிறுதிட்டமான உண்மை. அதிலும் மருத்துவர்கள் எனும் போது, அவர் களின் அடிப்படைத் தேவைகளும் நாளாந்தச் செலவுகளும் அதிகம் என்பது மறுப்பதற்குரியதல்ல.

எனவே மனச்சாட்சிக்கு உட்பட்டு, பொருளீட் டம் செய்வதும் அதன் பொருட்டு தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்வதும் தவிர் க்க முடியாதது என்பதை ஏற்றுத்தானாக வேண்டும் என்பதற்கப்பால் அவை பற்றி நாம் வேறு எதனையும் கூற விரும்பவில்லை.
இவை ஒருபுறமிருக்க, யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையின் இதய சிகிச்சை நிபுணர் குழாத்தினர் இணைந்து கடந்த 20ஆம் திகதி முதற்தடவையாக திறந்த இதய சத்திரசிகிச் சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.

இதன்மூலம் இரண்டு நோயாளர்கள் உரிய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவர் களின் உயிர் பாதுகாக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் முதற்தடவையாக-வெற்றிகரமாக, திறந்த இதய சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத் திய நிபுணர்கள், யாழ்ப்பாணப் போதனா வைத் தியசாலைப் பணிப்பாளர் உள்ளிட்ட அத்தனை மருத்துவர்கள், துணை நிலை மருத்துவ ஆளணியினர், ஊழியர்கள் என எல்லோரும் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள்.

பொதுவில் பண பலம் இருந்தால் மட்டுமே உயிரைப் பாதுகாக்க முடியும் என்றொரு சூழ் நிலை உருவாகிக் கொண்டிருக்கின்ற இன் றைய காலகட்டத்தில், நம் போன்ற ஏழை மக் களினதும் உயிர் பாதுகாக்கப்படும் என்ற மிகப் பெரும் நம்பிக்கை, திறந்த இதய சத்திரசிகிச் சையை வெற்றிகரமாக மேற்கொண்டதன் மூலம் எங்கள் மருத்துவர்கள் ஏற்படுத்தி உள்ளனர். 
உயிர் என்பது மட்டும்தான் திரும்பக் கிடை யாதது. ஆகையால் உயிரைப் பாதுகாக்கும் இத்தகைய பணிகளைச் செய்யும் மருத்துவர் களை கையயடுத்து வணங்குவது கடவுளை வணங்குவதற்கு ஒப்பானது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila