அன்று சீர்காழியில் நடந்த சம்பவம் இது. சிவபாதவிருதையர் சம்பந்தக் குழந்தையை கேணிக்கட்டில் இருத்திவிட்டு நீராடச் செல்கிறார்.
தந்தையைக் காணாத குழந்தை அம்மையே அப்பா என்று அழுகிறது. குழந்தையின் அழு குரல் கேட்டு அம்மையும் அப்பனும் எருதேறி வருகின்றனர்.
தமிழினம் வாழ, தமிழ் வாழ, சைவம் தழைத் தோங்க பார்வதி அம்மையார் சம்பந்தக் குழந் தைக்கு ஞானப் பால் கொடுக்கிறார்.
சம்பவம் நடந்து முடிந்த கையோடு சிவபாத விருதையர் கரையேறி வருகிறார். சம்பந்தக் குழந்தையின் கடைவாயில் பால் வழிந்திருக் கிறது.
அந்தோ! அபத்தம் அபத்தம். வேதம் ஓதும் வேதியர்களாகிய யாம் பிறரிடம் அன்னம் ஆகா ரம் அருந்தக் கூடாதன்றோ! என் குழந்தைக்கு யாரோ பால் கொடுத்துள்ளனர்.
அபச்சாரம் அபச்சாரம் என்று குழம்பிய சிவ பாதவிருதையர் கோபம் கொண்டு குழந்தையை அதட்டுகிறார். சம்பந்தா உனக்குப் பால் தந்தது யார் சொல்? பால் தந்தது யார் சொல்? தந்தை யின் அதட்டலுக்குப் பதலளிக்கிறது குழந்தை.
வானத்தை நோக்கி தோடுடைய செவியன் விடை ஏறியோர்... என்று பாடல் வரிகளால் தனக்குப் பால் தந்த பார்வதி பரமேஸ்வரனை அடையாளப்படுத்துகிறது.
அம்மையும் அப்பனும் எருதேறி வந்து தன் குழந்தைக்கு ஞானப்பால் கொடுத்தருளியதை உணர்ந்த சிவபாதவிருதயர் தோணிபுரத்து அம்மை அப்பனை வீழ்ந்து வணங்குகிறார். இது அன்று நடந்த கதை.
இன்று இங்கு நடப்பது என்ன? இதோ கதை ஆரம்பமாகிறது.
சம்பந்தர் தலைமையிலான சிலரை தமிழ் மக்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்புகின்றனர்.
அவர்கள் அனைத்தையும் பார்ப்பார்கள், எங்கள் பொறுப்பு முடிந்து விட்டது என்ற நினைப் பில் தமிழ் மக்கள் தங்கள் பாட்டைப் பார்க் கின்றனர். மீண்டும் தேர்தல் பேரிகை முழங்கு கிறது. மக்கள் விழித்து எழுகின்றனர்.
அதோ பாராளுமன்றத்துக்குச் சென்றவர் களில் சிலர் இரண்டு கோடி ரூபாயை வாங்கி யுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.
இஃதென்ன கொடுமை, எங்கள் பிள்ளை களைப் போரில் பலிகொடுத்துவிட்டு கண்ணீ ரும் கம்பலையுமாக நாங்கள் அலைகின் றோம்; காணாமல்போன எங்கள் உறவுகளைத் தேடி ஊண் உறக்கம் மறந்து வாழுகிறோம்;
சிறைகளில் வாடும் எங்கள் பிள்ளைகளின் விடுதலைக்காக ஏங்கி ஏங்கி விழித்திருக்கி றோம்.
ஆனால் இங்கு எங்கள் பிரதிநிதிகள் என்றி ருப்போரில் சிலர் அரசாங்கத்திடமிருந்து இர ண்டு கோடி ரூபாய் இலஞ்சமாக வாங்கியுள்ள தாகக் கூறுகின்றார்கள்.
எங்கே? சம்பந்தர் ஐயாவே சொல்லுங்கள், நீங்கள் இரண்டு கோடி ரூபாய் வாங்கினீர் களா? உங்களுக்கு இரண்டு கோடி ரூபாயைத் தந்தது யார்? ஏன் தந்தார்கள்? சொல்லுங்கள் சொல்லுங்கள். அதை என்ன செய்தீர்கள் சொல்லுங்கள்?
அட, தோடுடைய செவியன் பாடல் போல் எதையும் சம்பந்தர் பாடவில்லை. ஆனால் எல் லாம் அபிவிருத்திக்கே என்ற அசரீரி கேட்கிறது.
என் செய்வோம். அன்று ஞானப்பால்; இன்று இரண்டு கோடி ரூபாய். அவ்வளவுதான்.