தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடமிருந்து தலா இரண்டு கோடி ரூபாய் பணத்தை வாங் கியுள்ளனர் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தன் வெளிப்படையாகக் குற்றஞ் சாட்டியுள்ளார்.
தேர்தல் காலத்தில் கூறப்பட்ட இக்குற்றச் சாட்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பில் பல்வேறு சந்தேகங்களை மக்கள் எழுப்பியுள்ளனர்.
உண்மையில் அரசாங்கத்திடம் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு கோடி ரூபாய் பணத்தை இலஞ்சமாக வாங்கியிருந் தால் அது தமிழினத்துக்குச் செய்த மிகப் பெரும் துரோகத்தனமாகும்.
அதேவேளை அரசாங்கத்திடமிருந்து கூட்ட மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இர ண்டு கோடி ரூபாய் பணத்தை உண்மையி லேயே வாங்கவில்லை என்றால், அவர்கள் மீதான குற்றச்சாட்டு அபாண்டமானது என் றாகிவிடும்.
ஆக, இரண்டு கோடி ரூபாய் விவகாரம் தொடர்பில் சரியான - தெளிவான விளக் கத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தரும் தமிழ் மக்களி டம் முன்வைக்க வேண்டும்.
ஏனெனில் யுத்தத்தில் அகப்பட்டு உறவுக ளைப் பறிகொடுத்து, அங்கவீனமாகி இந்த உலகை வெறுத்து வாழுகின்ற தமிழ் மக்கள் மத்தியில்; அரசாங்கத்திடம் கைநீட்டி இலஞ்சம் வாங்குகின்றவர்களாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பார்களாயின் இவர்கள்; வன்னி யுத்தத் தில் தமிழினத்தை அழித்தவர்களை விட மோசமானவர்களாக இருப்பர்.
எது எவ்வாறாயினும் இரண்டு கோடி ரூபாய் விவகாரத்தை பாராளுமன்ற உறுப்பி னர் சிவசக்திஆனந்தன் வெளிப்படுத்திய பின்னர்,
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைக்கின்ற கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரணானதாக இருப்பதை மக்கள் அவ தானித்துள்ளனர்.
நாங்கள் பணம் வாங்கியதை எங்கே நிரூ பிக்கட்டும் பார்க்கலாம் என்று ஒரு பாராளு மன்ற உறுப்பினர் கூறுகின்றார்.
அதேநேரம் இன்னொரு பாராளுமன்ற உறுப்பினர் இரண்டு கோடி ரூபாயை நாங்கள் வாங்கியுள்ளோம். அதற்கு மேலாகவும் வாங்கு வோம். எல்லாம் அபிவிருத்திக்காக என்று கூறியுள்ளார்.
அதேவேளை இன்னொரு பாராளுமன்ற உறுப்பினர், எங்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்கிறார்.
சரி, அபிவிருத்திக்காக இரண்டு கோடி ரூபாய் வாங்கியது என்றால் செய்த அபிவி ருத்தி என்ன என்பதை மக்களுக்குப் பட்டியல் படுத்துவதே நியாயமானதாகும்.
பாராளுமன்ற உறுப்பினருக்காக ஒதுக்கப் பட்ட நிதியில் செய்த அபிவிருத்தி என்ன? அர சாங்கத்திடம் வாங்கிய இரண்டு கோடி ரூபா யில் செய்த அபிவிருத்தித் திட்ட வேலைகள் என்ன? என்பதைப் பட்டியல்படுத்தி இரண்டை யும் ஒன்றோடு ஒன்று கலக்காமல் தெளிவாக மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
இல்லையேல் இரண்டு கோடி ரூபாய் விவ காரம் கூட்டமைப்பை உய்யவிடாது.