இடைக்கால வரைபு வெளியாகிவிட்டது. அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தில் தமிழர்களு க்கு எல்லாம் இருக்கிறது. அடுத்த தீபாவளிக் குள் பிரச்சினை தீர்ந்துவிடும் என்றெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கூறிவருகிறது.
எனினும், அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை.
நிலைமை இதுவாகவிருக்கையில் உங்க ளோடு இனிமேல் இருக்க முடியாது என்று தன் அமைச்சர்களைப் பார்த்துக்கூறிவிட்டு ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேன வெளியேறுகின்ற அளவில்தான் தற்போதைய கள நிலை உள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர் சிக்கின்ற அளவில் அமைச்சர்கள் இருக்கின் றனர் என்றால், எங்கள் விடயத்தில் என்ன நடக்கும் என்பதை ஊகித்துக்கொள்வதில் கடி னமிருக்க முடியாது.
எனினும் நல்லாட்சி இனப்பிரச்சினைக்குத் தீர்வு தரும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நம்புகிறது என்றால் அதன் பின்னணி என்ன? என்று ஆராய்வது தமிழ் மக்களின் கடமையா கிறது.
இலங்கை அரசுக்கு ஐ.நா மனிதவுரிமை ஆணையம் விதித்த நிபந்தனைகளை நிறை வேற்றுகின்ற விடயத்தில் கால அவகாசம் கொடுக்கக்கூடாது என்று பலரும் வலியுறுத்தி யிருந்தனர்.
ஆனால், நல்லாட்சிக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பு கால அவகாசத் துக்கு ஆதரவு தெரிவித்தது.
இதன் காரணமாக ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையத்தில் நிபந்தனைகளை அமுலாக்கு வதற்கான கால அவகாசம் இலங்கை அரசு க்கு வழங்கப்பட்டது. ஆனால், இன்று நல்லா ட்சி நீடிப்பது கடினம் என்பது உறுதியாகிவிட்டது.
உங்களோடு இருக்க முடியாது. நம்பிக் கெட்டது நானல்ல என்று கூறிவிட்டு அமைச்சர வையை விட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன வெளியேறுகிறார் என்றால்,
எங்கள் பிரச்சினைக்கு நல்லாட்சி தீர்வு தருமா? என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பு தமிழ் மக்களுக்கு வெளிப்படையாகக் கூற வேண்டும். தவிர, நம்பிக் கெட்டவன் நானல்ல என்று ஜனாதிபதி மைத்திரி கூறும்போது யாரோ ஒரு தரப்பு நம்பிக் கெட்டுள்ளது என்பது தெளி வாகின்றது.
நம்பிக் கெட்ட தரப்பு யார்? என்ற கேள்வி எழும் போது அதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியாக இருக்க முடியாது என்பது புரிதற்குரியது.
ஏனெனில் அந்தக் கட்சி சார்ந்தவர்கள் தான் ஜனாதிபதி மைத்திரிக்கு இடுக்கண் செய் கின்றனர். எனவே, ஜனாதிபதி மைத்திரி கூறு கின்ற நம்பிக் கெட்ட தரப்பு தமிழ் மக்களாகவே இருக்க முடியும்.
ஆம்! நல்லாட்சி தீர்வு தரும். எங்கள் பிரச் சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம் பிய தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கப் போவ தில்லை என்பதால், நம்பிக் கெட்ட தரப்பு நிச்சயம் தமிழ் மக்களாகவே இருப்பர்.
இங்கு நம்பிக் கெட்டதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உள்ளடங்காது. ஏனெனில் இரா. சம்பந்தர் ஐயாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைத்ததல்லவா? ஆக, நம்பிக் கெட்டது நம் தமிழினம் என்று கூறுவதே பொருத்துடையது.