விடுதலைக்காகத் தன் உயிரை அர்ப்பணித்த விடுதலை ஆன்மா
வியாபாரப் பொருளாக நலினப்பட்டு நிற்கின்றது....
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வியாபாரப் பொருளாக நலினப்பட்டு நிற்கின்றது....
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
*இசைப்பிரியா*
*இசைப்பிரியா என்பது வஞ்சிக்கப்பட்ட ஈழப்பெண்களின் அடையாளம்*
*இசைப்பிரியா சிந்தியது போராடும் வீரப்பெண்புலிகளின் உதிரம்*
*இசைப்பிரியா என்பது தேசத்தின் பெரும் வலி தாங்கிய சிகரம்*
*இசைப்பிரியா கொண்டது ஈழதேவதையின் ஆன்மாவின் வலி*
*இசைப்பிரியா என்பது தமிழ்மறவர்களின் மான உணர்வு*
*இசைப்பிரியா தந்தது தமிழீழப்பெண்களின் பேரெழுச்சி*
இப்படிப்பட்ட எங்கள் மான உணர்வை விற்பனைச் சரக்காகச் சந்தையில் விலைபேச யார் உங்களை அனுமதித்தது...?
விடுதலைத்தீயின் அனலை அள்ளிக்குடித்த வேங்கைகள் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே இத்தனை துணிவை யார் தந்தது...?
எங்கள் ஈழத்தேவதையை மீண்டும், மீண்டும் காயப்படுத்தும் வஞ்சகம் எங்கிருந்து உங்களுக்கு வந்தது...?
எங்கள் மானம் என்றும் மரிப்பதில்லை...!
எங்கள் மாண்பு என்றும் குறைவதில்லை..!
எங்கள் பெண் தொட்ட எதிரியையும், உங்கள் பண்பற்ற இழிசெயலையும் காலம் ஒருநாளும் மன்னிக்கப்போவதில்லை...!
எங்கள் மாண்பு என்றும் குறைவதில்லை..!
எங்கள் பெண் தொட்ட எதிரியையும், உங்கள் பண்பற்ற இழிசெயலையும் காலம் ஒருநாளும் மன்னிக்கப்போவதில்லை...!
உங்களைப்போன்றவரின் ஈனச்செயல் கண்டு உங்கள் தாயும், உங்கள் சகோதரியும், உங்கள் மனைவியும், உங்கள் மகளும் நிச்சயம் வெட்கித்தலைகுனிவார்கள்!
*அப்போது நீதிதேவதை உங்களை நிச்சயம் வஞ்சித்திருப்பாள்*
-காந்தள்-
-காந்தள்-