சுன்னாகம் கழிவொயில் மறந்தது தமிழரசு?


chun1

வலி.வடக்கு பிரதேசசபை தேர்தலில் தமிழரசுக்கட்சியின் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் தவிசாளரான நபர் சுன்னாகம் கழிவொயில் பிரச்சனையினை மூடி மறைக்க மில்லியன்களில் தொடர்புடைய நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றார்.இதனை வெளிப்படுத்த தயாராக இருப்பதாக முக்கிய சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.தற்போது மாவையின் தனிப்பட்ட செயலாளருமாக உள்ள அவர் அப்பணத்தில் கட்டியுள்ள வீடு மாவை கட்டியுள்ள வீட்டிற்கு ஈடாகுமெனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது இலஞ்ச குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட பின்னர் நொந்துபோய் மாறி மாறி கருத்துக்களை வெளியிடுகின்ற அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுன்னாகம் கழிவொயில் பிரச்சனையின் போது வாய் திறக்காமல் இருந்ததற்கான காரணம் என்ன? குறித்த கழிவொயில் எண்ணெய் கலப்புக்கு காரணமான நிறுவனத்தை கொண்டு வந்தவரே அந்தப் பகுதியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் தான். ஆகையால் தான் அந்த விடயத்தில் ஒருவரும் பேசாது மௌனம் காத்தார்களாவென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பீ.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
chun11
தற்போது இலஞ்ச குற்றாச்சாட்டு முன்வைக்கப்பட்ட பின்னர் மாறி மாறி கருத்துக்களை கூறி வருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுன்னாகம் கழிவெண்ணை பிரச்சினையின் போது ஒருத்தரும் வாய் திறக்காமைக்கான காரணம் என்ன? மக்கள் போராட்டங்களை முன்னெடுத்த போது நாமும் அதில் கலந்து கொண்டிருந்தோம். அதற்கு எதிராக குரல் கொடுத்திருக்கின்றோம். ஆனால் கூட்டமைப்பினர் அந்த விடயத்தில் மௌனமே சாதித்தார்கள். ஏனெனில் குறித்த எண்ணெய் கலப்புக்கு காரணமான நிறுவனம் வடக்கிற்கு வருவதற்கான காரணம் நாடாளுமன்ற உறுப்பினர் தானென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த எண்ணெய் கலப்புக்கு காரணமான நிறுவனம் வடக்கிற்கு வருவதற்கான காரணமாக மாவை சேனாதிராசாவே இருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila