காடுகளை பாதுகாக்கும் நோக்கில் இராணுவ முகாம்கள் நிறுவப்பட உள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார்.' நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் வனவிலங்கு அழிப்பு மற்றும் காடழிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினேன்.வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் காடுகளை பாதுகாக்கும் நோக்கில் இராணுவ முகாம்களை அமைப்பதற்கு இந்த கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது.
|
2010ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் போது இலங்கையில் 50 வளர்ந்த தந்தங்களையுடைய யானைகள் காணப்பட்டன, எனினும் தற்பொழுது அந்த எண்ணிக்கை 30 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் வளர்ந்த தந்தங்களை உடைய ஐந்து யானைகள் கொல்லப்பட்டுள்ளன. இலங்கைக்கு விஜயம் செய்யும் ஒரு தரப்பு சுற்றுலாப் பயணிகள் யானைத் தந்தங்களினால் செய்யப்பட்ட பொருட்களுக்கு அதிக விலை கொடுக்கின்றனர்.
இதனால் இவ்வாறு யானைகள் கொல்லப்படுகின்றன. யானைகள் கொல்லப்படுதல், காடழிப்பு, வன விலங்குகள் வேட்டையாடப்படுதல் உள்ளிட்டனவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதிலும் வனவிலங்குப் பாதுகாப்பு பொலிஸ் பிரிவுகள், இராணுவப் பிரிவுகள், விமான மற்றும் கடற்படைப் பிரிவுகள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளது.தேசிய வனவிலங்கு பாதுகாப்புச் சரணாலயங்களை பாதுகாக்கும் நோக்கில் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ஒரு காவலரண் என்ற அடிப்படையில் பாதுகாப்பு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
|
காடுகளைப் பாதுகாக்க இராணுவ முகாம்களை அமைக்கத் திட்டம்!
Related Post:
Add Comments