ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த போதே வா.கௌதமன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“நான் கட்சி தொடங்க போகிறேன். கட்சியின் பெயர் முடிவாகி விட்டது. விரைவில் அதனை அறிவிப்பேன். 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
ஆனாலும், தமிழ் மக்கள் நடிகர் ரஜினிக்கு மிகப்பெரிய தோல்வியை பெற்றுக்கொடுப்பார்கள். எங்களிடம் பணம் இல்லை. ஆனால் மன உறுதி இருக்கின்றது. எங்களிடம் உண்மை இருக்கின்றது. இந்த மண்ணுக்காக உயிரையும் கொடுப்பேன்.
அவர் தமிழர்களின் உரிமைக்காக களத்தில் இறங்கி போராடி இருக்கிறாரா? நடிகர் ரஜினிக்கு பின்னால் பாரதிய ஜனாதா கட்சியே இருக்கின்றது. நடிகர் ரஜினியின் அரசியல் அறிவிப்பு தமிழகத்துக்கு துக்க புத்தாண்டு செய்தியாக அமைந்துள்ளது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தின் 234 தொகுதிகளில் எங்கு தேர்தலில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிட்டு தோற்கடிப்பேன் என வா.கௌதமன் மேலும் தெரிவித்துள்ளார்.