பொப் இசைப் பாடகர் மனோகரன் மறைந்தார்!


manokaran

இலங்கையின் பிரபல பொப் இசைப் பாடகர் ஏ.இ.மனோகரன் இன்று சென்னையில் காலமாகியுள்ளார்.  இலங்கையில் பொப்பிசைப் பாடல்கள் பலவற்றை பாடிய மனோகரன், இந்தியாவில் தமிழ் சினிமாவிலும் சின்னத்திரை நாடகங்களிலும் நடத்துள்ளார்.
“சின்னமாமியே உன் சின்ன மகள் எங்கே..“ போன்ற பாடல்கள் அவருக்கான தனித்துவமான இசை அடையாளத்தை ஏற்படுத்தியிருந்தன.
இலங்கையில் பொப்பிசைச் சக்கரவத்தி என பலராலும் அழைக்கப்பட்ட மனோகரன், தமிழ், சிங்களம், மலே, ஹிந்தி, உள்ளிட்ட பல மொழிகளில் பாடி ஈழத் தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர் என கலைஞர்கள் கூறுகின்றனர்.
”சுராங்கனி சுராங்கனி மாலு கெனாவா“ என்ற பாடல், ஈழத்தில் மாத்திரமல்ல, தமிழகம் உள்ளிட்ட தமிழ் மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் புகழ்பெற்றது.
அத்துடன் அந்தப்பாடலை ஹிந்தி, மலையாளம் போர்ச்சுக்கீஸ் உள்ளிட்ட பல மொழிகளிலும் பாடி உலக கலைஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.
நீண்டகாலமாக சென்னையில் வாழ்ந்து வரும் ஏ.இ.மனோகரன், இந்தியக் கலைஞர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். யுத்தத்திற்கு முன்னரான காலப்பகுதியில் அவர் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற இடங்களில் மேடைகளில் பொப்பிசைப் பாடல்களை பாடி இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தார்.
1970, 80 களில் இலங்கை வாணொலியிலும் அவரது பாடல்கள் தினமும் ஒலிபரப்பட்டு வந்தன. மனோகரன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.
இவரின் புகழுடல் பொதுமக்கள், கலைஞர்கள் உள்ளிட பலதுறையினரின் அஞ்சலிக்குப் பின்னர், எதிர்வரும் 24 ஆம் திகதி புதன்கிழமை சென்னையில் தகனம் செய்யப்படும் என உறவினர்கள் கூறியுள்ளனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila