பாகிஸ்தானின் சிற்பி ஜின்னா தன் உடல் நலம் மிக மோசமாகி வருவதைக்கூட வெளி யில் கூறாமல் இருந்தார்.
தனது உடல் நலம் குன்றிவிட்டது என்று தெரிந்தால் பாகிஸ்தானை பிரிக்க வேண்டா மென இந்தியர்கள் காந்திக்கு அழுத்தம் கொடு த்து விடுவார்கள் என்பது ஜின்னாவின் முடிவு. அந்த முடிவில் நியாயம் இருக்கவே செய்கிறது.
ஜின்னா என்றொரு மனிதன் இல்லை யயன்றால் பாகிஸ்தான் ஒரு நாடு என்ற பேச்சுக்கே இடமிருந்திருக்காது.
ஆக, தன் மக்களுக்கும் தன் தேசத்துக்கும் சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தன் உடல் நலக்குறைவைக் கூட ஜின்னாவும் அவருடன் சேர்ந்தவர்களும் மறைப்புச் செய்த னர். இதுதான் இராஜதந்திரம்.
இத்தகைய தலைவர்கள் நம் மத்தியில் இல்லாமல்போனமையும் எம் இனத்தின் துன்ப துயரங்களுக்குக் காரணம் எனலாம்.
இந்த நுட்பம் ஜின்னாவிடம் மட்டுமல்ல மாறாக தம் தேசம் விடிவு பெற வேண்டுமென நினைத்த தலைவர்கள் அத்தனை பேரிடமும் இதுபோன்ற நுட்பமும் இராஜதந்திரமும் இருந் துள்ளதென்பதே உண்மை.
ஆனால் தமிழர்களாகிய எங்களிடம் இராஜ தந்திரமும் இல்லை, நுட்பமும் இல்லை என் பதை கூறித்தானாக வேண்டும்.
தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றி சேர். பொன்.இராமநாதன் அவர்கள் நினைத்திருந் தால், அவரே எங்களின் ஜின்னாவாக இருந் திருக்க முடியும்.
ஆனால் அவர் தமிழ் மக்களின் வாழ்வு பற்றி எதுவும் சிந்திக்கவில்லை. சிந்திக்கக் கூடிய அனுபவ நிலையும் அவரிடம் இருந் திருக்கவில்லை. இதனால் அவர் டி.எஸ். சேன நாயக்கவிடம் ஏமாந்து போகின்ற அளவி லேயே இருந்தார்.
அன்று ஒரு இராமநாதன் நினைத்திருந் தால் தமிழருக்குத் தனிநாட்டைப் பெற்றுக் கொடுத்திருக்க முடியும்.
அந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டதால் இன்று உலகம் முழுவதிடமும் கையேந்தினா லும் அடிப்படை உரிமைகளைக்கூட தமிழ் மக்கள் பெற முடியவில்லை.
இந்த நிலையில் இப்போதும் எங்கள் தமி ழ்த் தலைவர்களின் உறுதியற்ற தன்மையும் சொந்தநலனுக்கும் புகழுக்கும் மயங்கிப் போகின்ற போக்கும் எங்களுக்கு இன்னமும் இடி விழுந்து கொண்டே இருக்கிறது.
ஆம், எங்களிடம் நல்ல தலைவர்கள் இருந் திருந்தால், அமெரிக்காவையும் இந்தியாவை யும் பார்த்து நீங்கள் எங்களை ஏமாற்றுகிறீர் கள். எங்கள் இனத்தை அழிக்கத் துணைபோகி றீர்கள் என்று துணிந்து சொல்லியிருப்பர்.
ஆனால் அவர்கள் அப்படிச் சொல்லாமல், அமெரிக்கா எதைச் சொல்கிறதோ அதைச் செய்பவர்களாகவே இருக்கின்றனர்.
இப்போதுகூட, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் பிரதமராக வருவதைத் தடுப்பதில் அமெரிக்காவும் இந்தியாவும் முதன்நிலையில் உள்ளன.
அதைச் செய்வதற்காக நம் தமிழ் அரசியல் தலைமையிடம் சர்வதேச விசாரணை என்று நீங்கள் கோசம் போடுங்கள் மிச்சம் நாங்கள் பார்க்கிறோம் என்கிறார்கள்.
அட அநியாயமே! அதைச் செய்ய முடியு மென்றால், தமிழனுக்கு உரிமை பெற்றுக் கொடுப்பதை ஏன் செய்ய முடியாதுள்ளது.
இப்படிக் கேட்பதற்கு எங்களிடம் நல்ல தலைவர் இல்லையே! என்ன செய்வது?