சன்டே லீடர் பத்திரிகை ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்கவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ புலனாய்வுப் பிரிவினரை கைது செய்வதில், அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரத்துடன் சம்பந்தப்பட்ட உயர்மட்ட பலமிக்கவர் தடைகளை ஏற்படுத்தி வருவதாக சிங்கள பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், சம்பவம் நடந்த போது, இராணுவப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய உயர் அதிகாரி உட்பட சில அதிகாரிகள், கொலையுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
லசந்த கொலை தொடர்பாக தற்போது முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் கல்கிஸ்சை பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட உள்ளவரும், நிறைவேற்று அதிகாரத்துடன் சம்பந்தப்பட்டு செயற்படுபவர் எனவும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரின் உறவினர் எனவும் தெரியவருகிறது.
Add Comments