
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின்
போது ஆதரவு வழங்குகின்றது என தமிழரசுகட்சிக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை தயாரித்து இன்றைய உதயன் பத்திரிகையின் தலைப்பு செய்தியாக வெளியிட்டிருந்த நிலையில் அது தொடர்பான உண்மை வெளிவந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
“தமிழரின் கனவு நனவாக வீட்டுக்கு வாக்களிப்போம்” யாழ்ப்பாண கல்வியாளர் ஒன்றியம் வேண்டுகோள் எனத் தெரிவித்து உதயன் பத்திரிகை இன்றைய தினம் பிரதான செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒன்றுகூடி கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியதோடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பிலும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறான ஒரு அமைப்பு யாழ் பல்கலையில் இயங்கவில்லை என்றும் இவ்வாறான போலி அறிக்கைகள் தொடர்பில் விழிப்புடன் மக்கள் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
