நாளை 10ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல். தேர்தலுக்கான அத்தனை ஏற்பாடு களும் பூர்த்தியாகியுள்ளதாக தேர்தல் திணைக் களம் அறிவித்துள்ளது.
ஒரு நாட்டில் ஜனநாயக ஆட்சி தேர்தல் மூலமே அமைக்கப்படுகிறது. அதேநேரம் தேர் தலில் வாக்களிப்பதென்பது ஒவ்வொருவரின தும் உரிமையும் கடமையுமாகும்.
எனினும் ஒரு பகுதியினர் வாக்களிப்பில் ஆர்வமற்றவர்களாக இருந்து விடுகின்றனர். இவ்வாறான நிலைமை ஆரோக்கியமானதல்ல.
ஒரு தேர்தலை நடத்தி முடிப்பதற்காக இந்த நாடு பெருந்தொகையான பணத்தைச் செலவிட வேண்டியுள்ளது.
வாக்களிக்கும் உரிமையுடைய அத்தனை பேரும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்போது, வாக்களிப்பது தொடர்பில் மக் கள் விருப்பமற்றவர்களாக இருப்பதென்பது நல்லதல்ல.
எனவே நாளை பெப்ரவரி 10ஆம் திகதி உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் நடை பெறும்போது உரிய நேரத்தில் வாக்காளர்கள் அனைவரும் தத்தம் வாக்களிப்பு நிலையங் களுக்குச் சென்று தமது வாக்குகளை அளிக்க வேண்டும்.
அத்துடன் தேர்தல் நேர்மையாகவும் அமைதி யாகவும் ஒழுங்காகவும் நடைபெறுவதற்கு ஒவ்வொரு பொதுமகனும் தனது ஒத்துழைப்பை வழங்குவதும் அவசியமாகும்.
அதேநேரம் தேர்தல் பணியில்; வாக்களிப்பு நிலையங்களில் கடமையாற்றுவோர், வாக்கு களை எண்ணுபவர்கள், அவற்றைப் பதிவு செய்பவர்கள் என தேர்தல் பணிகளில் ஈடுபடும் அத்தனை உத்தியோகத்தர்களும் உயர் அதி காரிகளும் நேர்மையாகத் தேர்தல் நடைபெறு வதற்கு தங்களின் பூரண ஒத்துழைப்பை நல்க வேண்டும்.
தேர்தல் என்றால் இப்படியல்லவா நடை பெற வேண்டும். யாரும் எவரும் எந்தச் சந் தர்ப்பத்திலும் ஒரு குறையும் சொல்ல முடியாத அளவில் தேர்தல் நடைபெற்றது என்று கூறப் படுமாக இருந்தால், அது தேர்தல் பணியில் ஈடுபட்ட அத்தனை பேருக்கும் கிடைத்த மிகப் பெரும் வெகுமதியாகும்.
எனவே, மக்கள் வாக்களிக்கின்றனர். அந்த வாக்களிப்பின் அடிப்படையில் கடவுள் நீதிக்கு தலைவணங்கி, நிதானமாக வாக்களிப்பு இடம் பெறுவதற்கு; வாக்குகளை எண்ணுவதற்கு; அவற்றின் பதிவுகளைச் செய்வதற்கு; பெறப் பட்ட வாக்குகளை அறிவிப்பதற்கு என ஒவ் வொரு பணிகளிலும் உண்மை, நேர்மை, நீதி, கடவுளுக்குக் கணக்குக் கொடுத்தல் என்ற சத்தியங்களைப் பின்பற்றி தேர்தல் பணியைச் செய்வது தேர்தல் பணியில் ஈடுபடும் ஒவ் வொருவரினதும் தலையாய கடமையாகும்.
எல்லாவற்றுக்கும் மேலாக தேர்தல் அமைதி யாக, சுமூகமாக நடைபெற அத்தனை பேரும் உதவ வேண்டும்.