வலம்புரியின்நி லைப்பாடு என்ன?

எம் உயிரினும் மேலான தமிழ் மக்களுக்கு அன்பு வணக்கம்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் வலம்புரி அலுவலகத்துடன் தொலைபேசி மூலமாகவும் இணையவழி மூலமாகவும் தொடர்பு கொள்பவர்கள், 

வலம்புரியின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்வியைத் தொடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் பல விடயங்களைத் தமிழ் அரசியல் தரப்புகளுக் குத் தெளிவுபடுத்தி நிற்கிறது என்பது மறுத லிக்க முடியாத உண்மை.

கட்சிகள் கூட்டுச்சேராமல் பிரதேச சபைக ளில் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப் பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப் பெற்று வருகின்றன.
இதுதொடர்பில் மதத் தலைவர்களும் திரு வாய் மலர்ந்துள்ளனர். நம்மைப்பொறுத்த வரை, தமிழினத்துக்கு யாரெல்லாம் துரோகம் செய்தார்களோ அவர்களை இந்தப் பூமி ஒரு போதும் மன்னிக்காது என்பதில் நாம் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளோம்.

தமிழ் அரசியல் தலைமைகள் ஒற்றுமைப் பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகின்ற யதார்த்த சூழ்நிலையில், வலம்புரி யின் நிலைப்பாடு அன்று முதல் இன்று வரை ஒன்றாகவே இருக்கிறது.

ஆம், எம் தமிழினம் வாழவேண்டும், எங் கள் தமிழினம் இந்த மண்ணில் சகல உரிமை களுடனும் வாழ வேண்டும், எங்கள் கண்முன் னால் எம் இனம் அனுபவித்த மரணத் துடிப்பு, நாங்கள் பட்ட வதைகள் இனிமேல் இந்த மண் ணில் நடக்கக்கூடாது.

எங்கள் தாய்மொழிக்கு எந்தப் பங்கமும் ஏற் படாமல் இருக்க வேண்டும். தமிழினத்தின் வர லாறும் பண்பாட்டு கோலங்களும் என்றும் நிலைபெற வேண்டும்.

இதைவிட வேறு எந்தச் சிந்தனையும் எங்க ளிடம் கிடையாது என்பதை எங்கள் உயிரினும் மேலான தமிழ் மக்களிடம் சத்தியம் செய்கின்றோம்.

எம் இனம் கொன்றொழிக்கப்பட்ட கொடுமை சாதாரணமானதல்ல. பச்சிளம் குழந்தைகள் தம் பெற்றோரை இழந்து அநாதைகளாக அழு கண்ணீருடன் வாடிய கொடுமை தாங்க முடியா தது. இந்த பரிதவிப்பையே நாம் இங்கு அடிக் கடி நினைவுபடுத்துகிறோம்.

எனினும் எங்கள் வாக்குகளில் பாராளு மன்றப் பதவி பெற்றவர்கள் இவை பற்றிச் 
சிந்திக்கவே இல்லை.

அவர்களின் நினைப்பெல்லாம் போர் என் றால் இப்படியான இழப்புக்கள் நடக்கும் 
என்பதுதான்.

இங்குதான் நாம் கேட்பது போர் என்றால் உயிரிழப்பு நடக்கும் ஆனால் அந்த உயிரிழப்பு எங்களுக்கானதாக இருந்தால் அதை நாம் ஏற்றுக் கொள்வோமா என்பதுதான்.

ஆக, எம் தமிழினம் நிம்மதியாக, சுதந்திர மாக அனைத்து உரிமைகளுடனும் வாழ வேண்டும். 
அத்தகையதொரு இலக்கை நோக்கிச் செல்வதற்கு எது சரியான பாதையோ அதை உரியவர்கள் எல்லோரும் சேர்ந்து ஏற்படுத்த வேண்டும்.  
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila