யாழ் மாநகர சபையின் முதல்வர் தொடர்பில் கூட்டமைப்பின் உள்ளக முரண்பாடு உச்சம் பெற்றிருக்கின்ற நிலையில் முதல்வர் பதவிக்கு ஆர்னோல்ட் நியமிக்கப்படுவதை தவிர்க்க டக்ளஸ் தமிழரசு தலைமைக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனது கட்சி சார்பில் போட்டியிட்டு தெரிவான சில உறுப்பினர்களும் முதல்வர் பதவிக்கு ஆர்னோல்ட் நியமிக்கப்படுவதை விரும்பவில்லையெனவும் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாநகரசபை முதல்வர் பதவிக்கு ஆர்னோல்ட் நியமிக்கப்பட்டால் போட்டிக்கு மணிவண்ணன் நியமிக்கப்படுவாரென தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்திருப்பதுடன் இரகசிய வாக்கெடுப்பிற்கும் சவால் விடுத்துமுள்ளது.
இந்நிலையில் ஆர்னோல்ட்டினை முன்னிறுத்தினால் தோல்வியடையலாமென சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளதுடன் ஈபிடிபியின் றெமீடியஸ் உள்ளிட்ட சிலர் கடுமையான ஆட்சேபனை தெரிவித்துமுள்ளனர்.
இந்நிலையில் டக்ளஸின் புதிய அறிவிப்பு கூட்டமைப்பு தலைமைக்கு தலையிடியை தருமென எதிர்பார்க்கப்படுகின்றது.