அரச மரத்தைச் சுற்றி பாரியளவில் குழியினை ஏற்படுத்தி மரம் பாதிக்கபடாத வகையில் உயிரோடு நகர்த்தும் முயற்சிகள் படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், மரம் மற்றும் குளக்கரையில் இருந்து எடுக்கப்பட்ட புத்தர் சிலையும் பிறிதொரு இடத்தில் வைக்கப்படாலாம் என்று பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, இரணைமடு குளத்தின் வான் பகுதிக்கருகில் 2009க்கு பின்னர் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அண்மையில் அங்கிருந்து அகற்றப்பட்டிருந்த நிலையில், தற்போது அங்கிருந்த அரச மரமும் உயிரோடு பிடுங்கப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.