சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக அமர்த்த கோரிக்கை!!



சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமித்து, நீண்டகால மாக நீடிக்கும் முன்னைய ஆட்சிக் காலத்திலான ஊழல் மோசடிகளுக்கு எதிரான விசாரணைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு சிவில் சமூக அமைப்பான புரவெசி பலய கோரி க்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றிய புரவெசி பலய அமைப்பு, தற்போதைய அரசியல் குழப்ப ங்களைத் தீர்த்து, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் புரவெசி பலயவைச் சேர்ந்த தம்பர அமில தேரர் நேற்று கொழு ம்பில் செய்தியாளர்களிடம் பேசிய போது, “அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிக்க வேண்டும்.

முன்னைய ஆட்சிக்கால குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பத ற்கு சரத் பொன்சேகாவை விட பொருத்தமானவர் வேறு யாருமல்ல. இல ங்கை இராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் ராஜபக்சக்களுக்கு எதிரான நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு சிறிசேன- ரணில் அரசாங்கம் தவறியுள்ளது. அதன் விளைவு தான், பெப்ரவரி 10 தேர்தல் முடிவுகள். இந்த நடவடிக்கையை எடுப்பதற்கு சரத் பொன்சேகாவுக்கு 6 மாத கால அவகாசத்தை அரசாங்கம் அளி க்க வேண்டும்.

ராஜபக்சக்களின் வழிகாட்டலின் கீழ், இரகசிய நடவடிக்கைகளை மேற்கொ ண்ட, ஆயுதப்படை அதிகாரிகளுக்கும் படையினருக்கும் எதிராக நடவடிக்கை கள் எடுக்கப்படுவதுடன், சீருடையில் தவறுகளைச் செய்த கொலைகாரர்க ளும், வல்லுறவாளர்களும், சீருடைக்குப் பின்னால் மறைந்து தப்பிச் செல்ல  அனுமதி வழங்கக் கூடாது.

இரசானப் பசளைகளை உரிய நேரத்தில் விநியோகிக்கத் தவறிய விவசாயக அமைச்சர் துமிந்த திசநாயக்கவை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

இச் செய்தியாளர் சந்திப்பில் சிவில் சமூகத்தைச் சேர்ந்த கலாநிதி பாக்கிய சோதி சரவணமுத்து, நிமால்கா பெர்னான்டோ, சமீர பெரேரா, சமன் ரத்னபிரிய ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்வதற்காக எமது இணையமான Tamilkingdom.com தளத்துடன் இணைந்திருங்கள். உங்கள் அபிப்பிராயங்களையும் கருத்துக்களையும் மிகவும் அன்புடன் வரவேற்கின்றோம்
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila