பொன்னாலை வீதி திறப்பு:தேர்தல் விதிமுறை மீறல்!


pala3


இலங்கை அரசின் முக்கிய தேர்தல் பரப்புரையாகவும் மோசமான தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும் படையினரின் கட்டுப்பாட்டில் நீண்ட காலமாக இருந்த பொன்னாலை பருத்திதுறை வீதி இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.அத்துடன் விடுவிக்கப்பட்ட வீதியூடான போக்குவரத்து சேவைகளும் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் இணக்க அரசியலை முன்னிறுத்தி வீதி திறப்பினை 30 வருட ஆக்கிரமிப்பின் பின்னர் தேர்தல் காலத்தில் அவசர அவசரமாக படைத்தரப்பு மேற்கொண்டமை ஏன் என்ற கேள்வியை தோற்றுவித்துள்ளது.
குறிப்பாக வலிகாமம் விடுவிப்பு தொடர்பில் சீற்றமடைந்திருக்கும் மக்களிடையே நல்லெண்ணத்தை தோற்றுவிக்கவும் வலி.வடக்கில் தனது மகனை முன்னிலைப்படுத்தி தேர்தல் களத்தில் காத்திருக்கும் மாவை சேனாதிராசாவிற்கு அங்கீகாரம் வழங்கவுமே இவ் அவசர அவசர விடுவிப்பு நடைபெற்றிருந்ததாக சொல்லப்படுகின்றது.
pala2
அதிலும் குறிப்பாக வலி.வடக்கு தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் குதித்துள்ளவரும் மாவை சேனாதிராசாவின் சகபாடியுமான குணபாலசிங்கம் என்பவர் முன்னிலைப்படுத்தப்பட்டு படையினரால் இந்நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரான அரச அதிபர் பிரசன்னத்தில் வேட்பாளர் ஒருவர் இத்தகைய நிகழ்வில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளமை அப்பட்டமான தேர்தல் விதிமுறை மீறலென சொல்லப்படுகின்றது.
pala1
இத்தகைய பொதுநிகழ்வுகளில் வேட்பாளர்களை முன்னிலைப்படுத்தக்கூடாதென தேர்தல் ஆணையாளரும் அதனை தொடர்ந்து யாழ்.மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் சுற்றுநீரூபங்கள் ஊடாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila